இங்கிலாந்து ராணி II எலிசபத்திற்கு பாகுபலி-2 படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளி வந்துள்ளது.
பிரிட்டிஷ் அரசிடம் இருந்து இந்தியா விடுதலை பெற்று 70 ஆண்டுகள் நிறைவடைய உள்ளதை, இங்கிலாந்து மற்றும் இந்திய கலாச்சார அமைச்சகங்கள் இணைந்து வரும் ஏப்ரல் 27-ம் தேதி கொண்டாட உள்ளன. இந்த நிகழ்ச்சியில் இங்கிலாந்து ராணி II எலிசபெத் மற்றும் இந்திய திரை நட்சத்திரங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த கொண்டாட்டத்தில் பாகுபலி திரைப்படமும் அடங்கும்.
அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பாகுபலி 2-ம் பாகத்தின் டிரெய்லர் அடுத்த மாதம் 2-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்திருந்தது. இந்நிலையில் இன்று சிவராத்திரி முன்னிட்டு மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. யானையின் மீது பிரபாஸ் கம்பிரமாக நிற்பது போன்று அந்த காட்சி உள்ளது. இது தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மோஷன் போஸ்டர் வீடியோ:-
பாகுபலி-2 படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது
பாகுபலி-2 தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட 4 மொழிகளில் தயாராகி வருகிறது. பாகுபலி படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 6-ம் தேதி நிறைவடைந்தது. படத்தின்
டிரெய்லர் குடியரசு தினத்தன்று வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் இன்னும் முழுமையாக முடியாததால் படத்தின் டிரெய்லரை அடுத்த மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான படம் 'பாகுபலி'. ராஜமெளலி இயக்கிய இப்படத்தை ஷோபு மற்றும் பிரசாத் இருவரும் இணைந்து தயாரித்திருந்தார்கள். தமிழில் ஞானவேல்ராஜாவும், இந்தியில் கரண் ஜோஹரும் இப்படத்தை வெளியிட்டார்கள்.
உலகளவில் சுமார் 600 கோடி ரூபாய் வசூல் செய்து இந்தியாவில் தயாரான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்தது. மேலும், இப்படத்தின் 2-ம் பாகம் எடுக்கப்பட்டு வந்தது. ஏற்கனவே இந்த திரைப்படம் ஏப்ரல் 28, 2017ல் வெளியாகும்" என அறிவித்திருந்தார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.