பிரபல ஒளிப்பதிவாளர் ஜோமோன் டி.ஜான் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். அவர் இயக்கப்போகும் முதல் படத்தில் நிவின் பாலி நாயகனாக நடிக்க உள்ளார்.
'கைரளி' என்ற பெயரில் உருவாகும் இந்த புதிய படத்தின் மூலம் ஜோமோன் டி.ஜான் இயக்குனராக அறிமுகமாக உள்ளார்.
இவர் 'சார்லி', 'என்னு நின்டே மொய்தீன்', 'திரா', 'தட்டத்தின் மறையத்து', 'ஒரு வடக்கன் செல்பி' , ஜாக்கோபிண்டே ஸ்வர்கராஜ்யம்' போன்ற மலையாள படங்களுக்கும், ரோஹித் ஷெட்டி இயக்கி வரும் 'கோல்மால் 4' படத்துக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பிரேமம் படத்தின் மூலம் பிரபலமான மலையாள நடிகர் நிவின் பாலி.
கடந்த 2010-ம் ஆண்டு இவருக்கும் ரின்னா என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு 5 வயதில் தாவீத் என்ற மகன் உள்ள நிலையில், நேற்று மாலை பெண் குழந்தை பிறந்துள்ளது.
இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் இது பெண் குழந்தை என்று பலூனில் எழுதப்பட்ட பறக்கவிட்ட புகைப்படத்தை வெளியிட்டார்.
pic.twitter.com/KumT6yxCRG
முதல்முறையாக மலையாளப் படத்தில் த்ரிஷா நடிக்க உள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் நடித்துள்ளார் த்ரிஷா. ஆனால் மலையாளப்படத்த்தில் நடிக்க இதுவரை நடிக்க வாய்ப்பு அவருக்கு அமையவில்லை. தற்போது அவருக்கு அந்த வாய்ப்பு அமைந்துள்ளது. ஷ்யாமபிரசாத் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் படம் அடுத்த வருடம் தொடங்குகிறது. இந்தப் படத்தில் நாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த வருடம் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. எனவே அடுத்த வருடம் முதல் த்ரிஷா மலையாளப் படத்தின் படபிடிப்பில் கலந்த்து கொள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.