கோவையில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், நேற்று வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்திய நிலையில் இன்று 2வது நாளாக துடைப்பத்துடன் களம் இறங்கி தூய்மைப்பணியில் ஈடுபட்டார்.
பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளார்.
மகாத்மா காந்தி அவர்களின் 145-வது பிறந்த நாளான அக் 2, 2014 -ஆம் நாள் தூய்மை இந்தியா திட்டத்தினை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இத்திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பிரபலங்கள் பலரையும் தூதர்களாக நியமிக்கப்பட்டனர். மேலும் பிரபங்கள் பலரும் தங்களது ஆதரவினை வெளிப்படுத்தும் வகையினில் தங்களது சமுக வலைத்தளங்கள் மூலமும் பல பதிவுகளை பதிவிட்டு வந்தனர்.
கடந்த 2014-ம் ஆண்டு முதல் ‘தூய்மை இந்தியா’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த வருடம் தூய்மை குறித்து ஆய்வு 434 நகரங்களில், 37 லட்சம் பேரிடம் நடத்தப்பட்டது. அதன் முடிவை மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வெளியிட்டார்.
இந்த பட்டியலில், முதலிடத்தில் மத்திய பிரதேச மாநிலம் இந்துார் உள்ளது. அதனை தொடர்ந்து போபால்(மத்திய பிரதேசம்), விசாகப்பட்டினம்(ஆந்திர பிரதேசம்), சூரத்(குஜராத்), மைசூரு(கர்நாடகம்), திருச்சி(தமிழ்நாடு), டெல்லி, நவிமும்பை(மகாராட்டிரா), திருப்பதி(ஆந்திர பிரதேசம்), வதோதரா(குஜராத்) ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
விழா மேடையில் பிரதமர் மோடி மூதாட்டி ஒருவரின் காலை தொட்டு வணங்கிய சம்பவம் மிகவும் நிகழ்ச்சி அடையவைத்துள்ளது. தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது
பிரதமர் மோடியின் கனவு திட்டமான தூய்மை இந்தியா திட்டத்திற்கு பெரும் பங்களித்தவர்களை பாராட்டும் விழா சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் நடந்தது.
தூய்மை இந்தியா திட்டம் துவங்கப்பட்டு, நாளையுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகிறது. இத்திட்டம் துவங்கப்பட்ட நாளான அக்டோபர் 2-ம் தேதி, அனைவரும் தூய்மை பணியில் ஈடுபட வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.