ஜெ., மரணம்: திவாகரனுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்!!

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம், சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு சம்மன் அனுப்பியுள்ளது!

Last Updated : Apr 30, 2018, 04:41 PM IST
ஜெ., மரணம்: திவாகரனுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்!! title=

முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்ட 74 நாட்கள் சிகிச்சை அளித்தும் பலன் இன்றி டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார். 

அப்போது இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பிலும் பரவலாக பேசப்பட்டு வந்தது. ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என ஓபிஎஸ் கோரிக்கை வைத்தார். 

இதையடுத்து, தமிழக அரசு சார்பில் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. 

இதில் முன்னாள் தலைமைச்செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், ராமமோகனராவ், விவேக், கிருஷ்ணப்பரியா, மருத்துவர்கள் பாலாஜி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி, விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். 

இந்த நிலையில், சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு, ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. மே 3 ஆம் தேதி விசாரணை ஆணையத்தில் ஆஜராகுமாறு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

மறைந்த ஜெயலலிதா குறித்த மருத்துவ விவரங்களை ஆய்வு செய்ய மருத்துவக்குழு ஒன்றை அரசிடம் ஆணையம் கேட்டிருந்தது. 

இதற்கு மருத்த்துவ குழுவை ஆணையமே அமைத்துக் கொள்ளலாம் என தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

Trending News