YouTube-ல் இனி நீங்கள் விரும்பும் நேரத்தில் விளம்பரம்!

YouTube-ல் வீடியோக்களை பார்க்கும் நபரா நீங்கள்? உங்களுக்காகவே புதிய அம்சத்தினை அறிமுகம் செய்துள்ளது யூடியூப்!

Last Updated : May 14, 2018, 04:23 PM IST
YouTube-ல் இனி நீங்கள் விரும்பும் நேரத்தில் விளம்பரம்! title=

YouTube-ல் வீடியோக்களை பார்க்கும் நபரா நீங்கள்? உங்களுக்காகவே புதிய அம்சத்தினை அறிமுகம் செய்துள்ளது யூடியூப்!

பொதுவாக தொலைக்காட்சிகளில் ஒரு நிகழ்ச்சியினை பார்க்கையில், நிகழ்ச்சிக்கு இடையில் விளம்பரங்கள் வருவதை நாம் பார்த்திருப்போம். இந்த விளம்பரங்கள் ஓர் குறிப்பிட்ட இடைவெளியில் இருப்பதினை நாம் பார்களாம்.

நேயர்களுக்கு ஓர் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஓய்வு பெற இடைவேளேகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால் டிஜிட்டல் மீடியாக்களில் இவ்வாறு பெருவது சிரமம். எனவே தான் இதற்கென புதிய அம்சத்தினை யூடியூப் அறிமுகம் செய்துள்ளது.

நேயர்கள் வேண்டும் நேரங்களில் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப விளம்பரங்களை பார்க்கும் வகையில் வசதிகள் புகுத்தப்பட்டுள்ளது. இதன்படி நேயர்கள் 15 நிமிடம் முதல் 180 நிமிடங்கள் வரையிலான இடைவெளியில் விருப்பமான விளம்பவரங்களை பார்க இயலும்.

இந்த வசதியினை இயக்க நேயர்கள் தங்களது யூடியூப் கணக்கில் சென்று Settings - Remind me to take a break என்னும் வழியில் சென்று விருப்பமான நேர அளவினை தேர்வு செய்துக்கொள்ளலாம்.

ஏற்கனவே இதற்கு இணையான வசதிகள் யூடியூபில் இருந்து வருகின்றன. குறிப்பாக நேயர்களின் விருப்பமான வீடியோ தேர்விற்கு ஏற்ப விளம்பரங்களை கூகிள் விளம்பர வசதியுடன் விளம்பரங்கள் ஒளிப்பரப்பாகின்றன. இந்த விளம்பரங்கள் யூடியூப் கிரியேட்டர்ஸ் மூலம் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள இந்த வசதியால் நேயர்களின் விருப்பத்தில் விளம்பரங்கள் ஒளிப்பரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News