புது டெல்லி: ஏடிஎம் கார்டுகள் மூலம் மோசடி நடப்பதாக புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களை மோசடியில் இருந்து பாதுகாக்கவும், அவர்களின் பணம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளது. இப்போது ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க, எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் வரும் OTP-ஐ பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னரே ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க முடியும்.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்து, இந்த புதிய முயற்சியைப் பற்றி வாடிக்கையாளர்களுக்குத் தெரிவித்துள்ளது. மேலும், "எஸ்பிஐ ஏடிஎம்களில் பணப்பரிவர்த்தனை செய்வதற்கான எங்களது OTP அடிப்படையிலான பணத்தை எடுக்கும் முறை மோசடி செய்பவர்களுக்கு எதிரான தடுப்பூசியாகும். மேலும் மோசடியில் இருந்து உங்களைப் பாதுகாப்பதே எங்களின் முதன்மையான முன்னுரிமையாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளது.
எஸ்பிஐ ஏடிஎம்களில் இருந்து OTP மூலம் பணம் எடுக்க பாரத ஸ்டேட் வங்கி மிக எளிதான வழியை உருவாக்கியுள்ளது. அதைப் பயன்படுத்தும் போது, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு நான்கு இலக்க OTP அனுப்பப்படும்.
வங்கியின் கூற்றுப்படி, இந்த OTP நான்கு இலக்க எண்ணாக இருக்கும். இது பணப் பரிவர்த்தனையை அங்கீகரிக்கிறது. ஏடிஎம்மில் நீங்கள் எடுக்க விரும்பும் பணத்தின் மதிப்பை நீங்கள் உள்ளிட்டதும், உங்கள் பணத்தைப் பெற குறியீட்டை உள்ளிட வேண்டிய சாளரம் திரையில் தானாகவே தோன்றும்.
இருப்பினும், எஸ்பிஐ ஏடிஎம் கார்டு உள்ளவர்கள் மட்டுமே இந்தச் சேவையைப் பெற முடியும் மற்றும் எஸ்பிஐ ஏடிஎம்மில் மட்டுமே பணம் எடுக்க முடியும். தற்போது இந்த வசதி மற்ற வங்கிகளின் ஏடிஎம்களில் கிடைக்காது.
முன்னதாக, எஸ்பிஐ மூத்த குடிமக்களுக்கு பண்டிகை பரிசுகளை வழங்கியது. இப்போது எஸ்பிஐயின் சிறப்பு நிலையான வைப்புத் திட்டத்தின் பலனை மார்ச் 2022 வரை எடுத்துக் கொள்ளலாம். அதாவது, இந்த சிறப்புத் திட்டம் மீண்டும் ஒருமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 2020 இல், நாட்டின் முதன்மையான கடன் வழங்குபவர் மூத்த குடிமக்களுக்கான SBI 'WECARE' நிலையான வைப்புத் திட்டத்தை ஆரம்பத்தில் செப்டம்பர் 2020 வரை அறிவித்தது. ஆனால் கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில், சிறப்பு FD திட்டம் பல முறை நீட்டிக்கப்பட்டது. தற்போது இந்த திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் இறுதி வரை வங்கி நீட்டித்துள்ளது.
சமீபத்தில் வங்கி தனது கடன் பிரிவில் பல சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்களைக் குறைத்திருப்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த திட்டங்கள் அனைத்தும் பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR