வீட்டில் ஏடிஎம் கார்டை வைத்துவிட்டு வந்தாலும் UPI-ஐப் பயன்படுத்தி பணம் எடுக்கலாம்!

இனி ஏடிஎம் கார்டை வீட்டில் மறந்து வைத்துவிட்டு வந்தாலும், உங்களிடம் யுபிஐ ஐடி இருந்தால் போதும்  ஏடிஎம் மெஷின்களில் நீங்கள் பணம் எடுக்கலாம்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 10, 2023, 02:09 PM IST
  • யுபிஐ பணப்பரிவர்த்தனை
  • ஏடிஎம்களில் பணம் எடுக்கலாம்
  • விரைவில் இந்த வசதி அறிமுகம்
வீட்டில் ஏடிஎம் கார்டை வைத்துவிட்டு வந்தாலும் UPI-ஐப் பயன்படுத்தி பணம் எடுக்கலாம்! title=

இந்தியாவில் யுபிஐ மூலம் பணப் பரிவர்த்தனை செய்வது என்பது அதிகரித்துவிட்டது. அதாவது மொபைலே இப்போது வங்கியாக மாறிவிட்டது. க்யூஆர் கோடு அல்லது மொபைல் எண் இருந்தால்போதும், ஈஸியாக பணப் பரிவர்த்தனையை நொடியில்செய்துவிட முடியும். இது இந்தியாவின் வங்கித் துறையில் மாபெரும் புரட்சியாக பார்க்கப்படுகிறது. உலகளவிலும் யுபிஐ பணப்பரிவர்த்தனை என்பது  அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்திய யுபிஐகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு வருகின்றன. இதில் இப்போது புதிய அப்டேட் வந்துள்ளது. அதாவது இனி ஏடிஎம் கார்டுகளுக்கும் மாற்று வந்துவிட்டது. உங்களிடம் யுபிஐ ஐடி இருந்தால்போதும், உடனடியாக ஏடிஎம் மெஷின்களில் கார்டு இல்லாமலேயே பணம் எடுத்துக் கொள்ள முடியும்.

மேலும் படிக்க | UPI ATM... பணம் எடுக்க டெபிட் கார்டு, கிரெடிட் கார்டி இரண்டும் தேவையில்லை...!!

இந்த அம்சமும் வாடிக்கையாளர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் ஏடிஎம் கார்டுகளுக்கு முடிவுரை எழுதும் காலம் இப்போது தொடங்கியிருக்கிறது. ET இன் அறிக்கையின்படி, UPI-ATM ஐ வெளியாகியுள்ளது. இது ஏடிஎம் இயந்திரத்தைப் போன்றது. பொதுவாக, உங்கள் வங்கியிலிருந்து பணத்தை எடுக்க ஏடிஎம்மில் டெபிட் அல்லது கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவீர்கள். ஆனால் இந்த புதிய UPI-ATM உடன் உங்களுக்கு கார்டு தேவையில்லை. 

இது "ஹிட்டாச்சி மனி ஸ்பாட் UPI ஏடிஎம்" என்று அழைக்கப்படுகிறது. இது செப்டம்பர் 5, 2023 அன்று மும்பையில் நடந்த குளோபல் ஃபின்டெக் ஃபெஸ்ட்டில் பங்கேற்பாளர்களுக்குக் காட்டப்பட்டது. யுனைடெட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) எனப்படும் தனித்துவமான ஃபோன் மென்பொருளைப் பயன்படுத்தி கார்டு இல்லாமலேயே உங்கள் வங்கியில் இருந்து பணத்தை எடுக்க முடியும் என்பதே இந்த யுபிஐ ஏடிஎம்களின் நேர்த்தியான விஷயம்.

UPI ஏடிஎம் மூலம் பணத்தை எடுப்பதற்கான படிப்படியான வழிகாட்டி:

- இந்த ஏடிஎம் மெஷினில் UPI மூலம் பணத்தை திரும்பப் பெறும் விருப்பத்தைத் தேர்வு செய்யவும்

- இப்போது, நீங்கள் திரும்பப் பெற விரும்பும் தொகையை உள்ளிடவும்

- உங்கள் UPI ஐடி மூலம் QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

- பரிவர்த்தனையைத் தொடர UPI பின்னை உள்ளிடவும்

- நீங்கள் எடுக்க இருக்கும் தொகை ஏடிஎம்மில் இருந்து கிடைக்கும்

மேலும் படிக்க | EPFO முக்கிய அப்டேட்: பிஎஃப் சந்தாதாரர்களுக்கான குடும்ப ஓய்வூதியம் எப்படி கணக்கிடப்படுகிறது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News