வாட்ஸ்அப் நிறுவனம் புதிய அம்சங்களை மேம்படுத்திக் கொண்டே இருக்கிறது. பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்த கொண்டுவரப்படும் இதுபோன்ற அப்டேட்டுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் பழைய போன்களுக்கு பொருந்துவதில்லை. இதனால், குறிப்பிட்ட செட்டிங்ஸ் கொண்ட போன்களில் வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியாது. மெசேஜிங் செயலியின் இந்த சேவை இனி அவர்களுக்கு கிடைக்காது. முற்றிலுமாக நிறுத்தப்படுகிறது. அந்தவகையில் ஆண்ட்ராய்டு ஓஎஸ் பதிப்பு 4.1 மற்றும் அதற்குப் பிறகு இயங்கும் சில பழைய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான ஆதரவை இது நிறுத்துகிறது.
WhatsApp FAQ -ன் அதிகாரப்பூர்வ குறிப்பின்படி, 'ஒவ்வொரு ஆண்டும், மற்ற தொழில்நுட்ப நிறுவனங்களைப் போலவே, எந்த சாதனங்கள் மற்றும் மென்பொருளை ஆதரிப்பதை நிறுத்துவது என்பதைப் பற்றி நாங்கள் சிந்திக்கிறோம். அந்தவகையில் குறிப்பிட்ட பழைய தொழில்நுட்பம் மற்றும் சாதனங்களைப் பயன்படுத்தும் பயனர்கள் குறைவாக உள்ளனர். இந்த சாதனங்களில் சமீபத்திய பாதுகாப்பு புதுப்பிப்புகள் இல்லாமல் இருக்கலாம் அல்லது வாட்ஸ்அப் போன்ற பயன்பாடுகள் சரியான செயல்பாடு இல்லாமல் இருக்கலாம்.' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த மொபைல்களில் வாட்ஸ்அப் இருக்காது?
Samsung Galaxy S2, Nexus 7, iPhone 5, iPhone 5c, Archos 53 Platinum, Grand S Flex ZTE, Grand Pro, Samsung Galaxy Nexus, HTC Sensation, Motorola Droid Razr, Sony Xperia S2, Motorola Xoom, Samsung Galaxy Tab 10.1, Asus பேட் டிரான்ஸ்ஃபார்மர், ஏசர் ஐகோனியா டேப் A5003, Samsung Galaxy S, HTC டிசையர் HD, LG Optimus 2X, Sony Ericsson Xperia Arc3
வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கம்
இந்த மாற்றம் குறித்து பயனர்களுக்கு வாட்ஸ்அப் தெரிவித்திருப்பது என்னவென்றால், அவர்களின் சாதனங்களை மேம்படுத்துமாறு அறிவுறுத்தி வருகிறது. பயனர்கள் தங்கள் சாதனங்களை மேம்படுத்தவில்லை என்றால், அக்டோபர் 24க்குப் பிறகு அவர்களால் WhatsApp ஐப் பயன்படுத்த முடியாது. அக்டோபர் 24க்குப் பிறகும் பழைய ஸ்மார்ட்போன் மாடல்களை வைத்திருக்கும் பயனர்களுக்கு வாட்ஸ்அப் டெவலப்பர்களால் தொழில்நுட்ப ஆதரவு மற்றும் புதுப்பிப்புகளை வழங்க முடியாது. இந்த பயனர்களின் சாதனங்கள் இனி தானியங்கி புதுப்பிப்புகள், இணைப்புகள், பாதுகாப்பு திருத்தங்கள், பிழை திருத்தங்கள் அல்லது புதிய அம்சங்களைப் பெறாது.
சாதனத்தின் OS-ஐ எவ்வாறு சரிபார்க்கலாம்
- உங்கள் ஸ்மார்ட்போனில் செட்டிங்ஸை திறக்கவும்.
- "About phone" என்பதைத் கிளிக் செய்யவும்.
- "Software Information" என்பதைத் கிளிக் செய்யவும்.
- உங்கள் ஆண்ட்ராய்டு பதிப்பை "Version" வகையின் கீழ் சரிபார்க்கவும்.
மேலும் படிக்க | அமேசான் விற்பனை 2023: நம்ப முடியாத ஆஃபர்..! சரிபாதி தள்ளுபடியில் லெனோவா டேப்லெட்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ