வாட்ஸ் அப் நிறுவனம் புதுபுது அப்டேட்டுகளை இறக்கிக் கொண்டே இருக்கிறது. மார்கெட்டில் வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு போட்டி அதிகம் இருப்பதால், தன்னுடைய இருப்பை தக்கவைத்துக் கொள்ள புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. வாடிக்கையாளர்களின் சேவையை அறிந்து புதிய அம்சத்தை கொண்டு வரும் வாட்ஸ் அப், இப்போது அனுப்பிய மெசேஜை எடிட் செய்து கொள்ளும் அம்சத்தைக் கொண்டு வர இருக்கிறது. இதற்கான டிரெயிலை ஏற்கனவே வாட்ஸ்அப் தொடங்கிவிட்டது. வாட்ஸ்அப் குறித்து சீக்ரெட் தகவலை ரிலீஸ் செய்யும் டிராக்கர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்
அவர் வெளியிட்டிருக்கும் தகவலின்படி, இதற்கான சோதனை வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் நடைபெற்று வருகிறது. அதன்படி எடிட் செய்யப்படும் மெசேஜ்களில் எடிட் செய்யப்பட்டதை குறிக்கும் லேபல் இடம்பெற்று இருக்கிறது. மேலும் குறுந்தகவலை அனுப்பிய 15 நிமிடங்கள் வரை எடிட் செய்ய முடியும். "எடிட் மெசேஜ்" அம்சம் கொண்டு அனுப்பிய குறுந்தகவலை குறிப்பிட்ட டைம் வரை எடிட் செய்யலாம். இந்த அம்சம் "டெலிட் மெசேஜ்" அம்சத்திற்கு மாற்றாக உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த அம்சத்தை பயன்படுத்தி எடிட் செய்யப்படும் குறுந்தகவலில் எடிட் செய்யப்பட்டதை குறிக்கும் லேபல் இடம்பெற்று இருக்கிறது. இந்த அம்சம் தற்போது உருவாக்கும் பணிகளில் இருப்பதால் செயலியின் ஸ்டேபில் வெர்ஷனில் எப்போது வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. முன்னதாக வாட்ஸ்அப் செயலியின் பிஸ்னஸ் வெர்ஷனில் தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டும் சந்தா முறையை வழங்க துவங்கியது. இந்த அம்சம் வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் வெர்ஷனில் புழகத்தில் இருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ