பெட்ரோல் டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு தினசரி உயர்ந்து வருவது மக்களுக்கு பெரும் கவலையாக உள்ளது. குறிப்பாக, தினசரி கார்களில் பயணிப்பவர்களுக்கு கூடுதல் தலைவலி. இதனால், மின்சார வாகனங்களை வாங்கலாமா? என்று பலர் யோசிக்கத் தொடங்கியிருக்கின்றனர். அப்படி, நீங்களும் யோசிக்கத் தொடங்கியிருந்தால், இந்த டிப்ஸ்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
1. மின்சார வாகனம்
தற்போதைய சூழலில் மின்சார வாகனங்களின் விலை தாறுமாறாக இருக்கின்றன. அதிகபட்ச விலையிலேயே கிடைக்கின்றன. வரிச்சலுகை உள்ளிட்டவை இருத்தாலும், பல இடங்களில் அடிப்படை கட்டமைப்புகள் இல்லை. மேலும், ரீ சேல் மார்க்கெட் பொறுத்தவரை மின்சார வாகனங்களுக்கு அறுதியிட்டு சொல்ல முடியாது. இதனால், மின்சார வாகனங்களை மீண்டும் விற்பனை செய்துவிடலாம் நினைத்தால், அது உங்களுக்கு கை கொடுக்கும் என்பது கடினம்.
மேலும் படிக்க | Google Chrome பயன்படுத்துவோர்க்கு எச்சரிக்கை விடுத்த கூகுள்!
2. காரின் சிறப்பம்சங்கள்
நீங்கள் வாங்கப்போகும் மின்சார காரின் அனைத்து சிறப்பம்சங்களையும் நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். எவ்வளவு தூரம் செல்லும், மைலேஜ் எவ்வளவு கொடுக்கிறது என்பதில் தெளிவாக இருந்து, அதற்கேற்ப கார்களை தேர்வு செய்து வாங்க வேண்டும். உதாரணமாக, Kia Soul EV கார் 240 முதல் 280 கிலோ மீட்டர்கள் வரை செல்லக்கூடும். அதேநேரத்தில், பழைய கார்களாக இருத்தால் அந்தளவுக்கான தொலைவு செல்லுமா? என்பது கேள்விக்குறி. பேட்டரி குறித்து நீங்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். மின்சார வாகனத்தில் மியூசிக் கேட்டால் கூட பேட்டரி செலவாகும்.
3. மெக்கானிக் சோதனை
நீங்கள் கார் வாங்குவதற்கு முன்பு, அந்த காரை தகுதியான மெக்கானிக்கை அழைத்துச் சென்று காண்பித்து பரிசோதிப்பது நல்லது. புதிய காராக இருந்தாலும், அவற்றின் பேட்டரி லைஃப் மிகவும் முக்கியம். பேட்டரி சரியாக இல்லையென்றால் கார் வாங்கியதே வேஸ்ட். பழைய கார் என்றால் நீங்கள் இன்னும் யோசிக்க வேண்டும். பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது என்பதற்காக மின்சார கார்களை வாங்கிவிடக்கூடாது. பெட்ரோல் - டீசல் கார்களை விட ஏராளமான சிக்கல்கள் பயன்படுத்தப்பட்ட மின்சார கார்களில் இருக்கும்.
மேலும் படிக்க | உங்களின் பைக் கனவை நனவாக்க 5 வழிகள்
4. நிறுத்தி வைத்திருந்தாலும் சிக்கல்
மின்சார கார்களைப் பொறுத்தவரை நிறுத்தி வைத்திருநாலும் சிக்கல் உங்களுக்கு தான். ஏனென்றால் மின்சார கார்கள் அல்லது மோட்டார் பைக்குகள் குறிப்பிட்ட அளவுக்கு இயக்கப்படாவிட்டால் பேட்டரி இயல்பாகவே அதன் சக்தியை இழந்துவிடும். இது காரின் மொத்த மதிப்பையும் கெடுத்துவிடும் என்பதால், மின்சார கார்களை அடிக்கடி இயக்கிக் கொண்டே இருக்க வேண்டும். தினமும் உபயோகிக்கிறீர்களா? அல்லது வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்துகிறீர்களா? என்பதை பொறுத்து கார் நிபுணர்களுடன் ஆலோசித்துக் காரை தேர்ந்தெடுங்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR