Vodafone Idea Guarantee Program: வோடபோன் ஐடியா (Vi) நிறுவனம் தற்போது அதன் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு புதிய Vi Guarantee Program என்ற குறுகிய கால பிளான் ஒன்றை இன்று அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தால் அனைத்து 5ஜி மற்றும் புதிய 4ஜி ஸ்மார்ட்போன்களை கொண்ட பயனர்களுக்கு தடையற்ற அதிவேகத்தில் டேட்டா சேவை அளிக்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்டப்டுள்ளது.
இந்த புதிய Vi Guarantee Program மூலம், வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருட காலத்திற்கு 130ஜிபி டேட்டா கூடுதலாக கிடைக்கும். அதாவது ஒவ்வொருவரின் கணக்கிற்கும் பிரதி மாதம் 28ஆம் தேதி அன்று 10ஜிபி டேட்டா வரவு வைக்கப்படும், அதவும் 13 மாதங்களுக்கு.
Vi Guarantee பிளான்
இந்த புதிய முன்னெடுப்பு குறித்து பேசிய வோடபோன் ஐடியா நிறுவனத்தின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி அவ்னீஷ் கோஸ்லா கூறுகையில்,"இன்றைய டிஜிட்டல் உலகத்தில், நுகர்வோரின் பணிக்கும், பிறருடனான தொடர்புக்கும், பொழுதுபோக்குக்கும் டேட்டா என்பது அதிகமாக தேவைப்படுகிறது. எனவே, தடையற்ற வகையில், அதுவும் அதிவேக டேட்டா பலனை நுகர்வோருக்கு அளித்து அவர்களின் தேவையை பூர்த்தி செய்யவே இந்த புதிய Vi Guarantee Program வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ஏர்டெல் சிம் கார்டு வச்சிருக்கீங்களா? நெட்பிளிக்ஸ் இலவசம்! தெரியுமா இந்த விஷயம்
இதனை எப்படி வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் பெறுவது என்பது குறித்து இதில் விரிவாக காணலாம். வோடபோன் ஐடியா நிறுவனத்தின் இந்த புதிய Vi Guarantee பிளானை பெற வேண்டுமென்றால், தினந்தோறும் வரம்பற்ற டேட்டாவை வழங்கும் ரூ.239 பிளானையும், அதற்கு மேற்பட்ட பிளானையும் ரீசார்ஜ் செய்திருக்க வேண்டும்.
Vi Guarantee பிளான்: யார் யாருக்கு கிடைக்கும்?
மேலும், இந்த ரீசார்ஜ் பிளானில் கொடுக்கப்பட்டுள்ள டேட்டாவை முடிந்த பின்னர்தான் Vi Guarantee பிளானின் கூடுதல் டேட்டாவை பயன்படுத்த முடியும். மேலும், 5ஜி ஸ்மார்ட்போன் வைத்திருப்போக்கும், புதிதாக 4ஜி ஸ்மார்ட்போனை வாங்கியவர்களுக்கும் மட்டும்தான் இந்த Vi Guarantee பிளான் செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கூடுதல் டேட்டாவை தகுதிவாய்ந்த வாடிக்கையாளர்கள் 121199 என்ற நம்பருக்கு கால் செய்யலாம் அல்லது *199*199# என்ற எண்ணை மொபைலில் டயல் செய்யவும்.
இந்த பிளான் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வோடபோன் ஐடியா பயனர்களுக்கு என்று அறிவிக்கப்பட்டாலும் கர்நாடகா, ஆந்திரா, மத்திய பிரதேசம், அசாம், வடகிழக்கு பிரதேசங்கள் மற்றும் ஒரிசாவில் கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் மட்டுமே தற்போது இந்தியாவில் 5ஜி வேகத்தில் இணைய சேவையை வரம்பற்ற வகையில் வழங்கி வருகின்றன. வோடபோன் ஐடியா நிறுவனம் 5ஜி சேவையை இன்னும் நீட்டிக்காத நிலையில், 5ஜி ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் தற்போது இந்த புதிய திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது எனலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ