வெறும் ரூ.549-க்கு அசத்தல் Realme C35: பிளிப்கார்டில் தள்ளுபடி மழை

Flipkart Offer: ஐபோன் போல் அசத்தலாக காணப்படும் Realme C35 தொலைபேசியை வெறும் 549 ரூபாய்க்கு வாங்க ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 10, 2022, 01:17 PM IST
  • Realme புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது.
  • Realme C35 ஐ 549 ரூபாய்க்கு வாங்கலாம்.
  • மார்ச் 12 முதல், பிளிப்கார்ட்டில் விற்பனை தொடங்கும்.
வெறும் ரூ.549-க்கு அசத்தல் Realme C35: பிளிப்கார்டில் தள்ளுபடி மழை   title=

நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போனை வாங்கும் எண்ணத்தில் இருந்து, ஆனால் அதற்கு அதிகம் செலவு செய்ய தயாராக இல்லை என்றால், உங்களுக்கான ஒரு அற்புதமான யோசனையை இந்த பதிவில் வழங்கவுள்ளோம். ரியல்மியின் சமீபத்திய ஸ்மார்ட்போனான ரியல்மி சி35 (Realme C35) இல் கிடைக்கும் சலுகையைப் பற்றி இப்பதிவில் காணலாம். ஐபோன் போல் அசத்தலாக காணப்படும் இந்த தொலைபேசியை வெறும் 549 ரூபாய்க்கு வாங்க ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது.

அச்சு அசலாக ஐபோன் போல் இருக்கிறது

இந்த ரியல்மீ ஸ்மார்ட்போன் அச்சு அசல் ஐபோன் போல் இருக்கிறது. ரியல்மி தனது புதிய ஸ்மார்ட்போனான ரியல்மி சி35 போனை சில நாட்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. ரியல்மியின் இந்த புதிய ஸ்மார்ட்போன் பார்ப்பதற்கு ஐபோன் 13 போலவே இருக்கிறது. அதன் கேமரா அமைப்பு, வடிவமைப்பு என அனைத்தும் ஐபோன் 13 உடன் பொருந்தும் வகையில் உள்ளன. 

5,000mAh பேட்டரி மற்றும் 6.6 இன்ச் முழு எச்டி+ எல்சிடி டிஸ்ப்ளே கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பகத்துடன் வருகிறது. இந்த 4ஜி ஸ்மார்ட்போனில், 50எம்பி பிரைமரி சென்சார் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. மேலும் 8எம்பி முன்பக்க கேமராவும் இதீல் உள்ளது. 

இந்த வழியில் வெறும் 549 ரூபாய்க்கு வாங்கலாம்

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போனை ஃப்ளிப்கார்ட்டில் இருந்து ரூ.549க்கு வாங்கலாம். ரியல்மி சி35 இன் வெளியீட்டு விலை ரூ. 13,999 ஆகும். எனினும் 14% தள்ளுபடிக்குப் பிறகு பிளிப்கார்டில் இதை ரூ.11,999க்கு வாங்கலாம்.

மேலும் படிக்க | பச்சை நிறத்தில் புதிய ஐபோன்! என்ன ஸ்பெஷல் இதில்? 

வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு பதிலாக இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால், ரூ.11,450 வரை சேமிக்கலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், ரியல்மி சி35 ஸ்மார்ட்போனின் விலை ரூ.549 ஆக குறைந்துவிடும். 

எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் இல்லாமலும் தள்ளுபடி கிடைக்கும்

உங்கள் பழைய ஸ்மார்ட்போனை நீங்கள் விற்க விரும்பாவிட்டாலும், அல்லது, உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு பதிலாக ரியல்மி சி35 போனை நீங்கள் வாங்க விரும்பவில்லை என்றாலும், அந்த சூழலிலும் உங்களுக்கு தள்ளுபடி கிடைக்கும். 

இந்த டீலில் வங்கிச் சலுகையும் கிடைக்கிறது. இதன் கீழ், இந்த போனை வாங்கும்போது பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங் கிரெடிட் கார்டை பயன்படுத்தினால், வாடிக்கையாளர்களுக்கு ரூ.600 கேஷ்பேக் கிடைக்கும். இதன் மூலம் நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை ரூ.11,399க்கு வாங்க முடியும்.

பிளிப்கார்டில் ரியல்மி சி35 ஸ்மார்ட்போனை மார்ச் 12 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு முதல் வாங்கலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

மேலும் படிக்க | விற்பனைக்கு வந்த சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் - விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News