Facebook நிறுவனத்திற்கு ₹.4.72 கோடி அபராதம் விதித்த இங்கிலாந்து...

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா விவகாரத்தில் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு ரூ.4.72 கோடி அபராதம் விதித்தது இங்கிலாந்து அரசு.... 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 25, 2018, 06:42 PM IST
Facebook நிறுவனத்திற்கு ₹.4.72 கோடி அபராதம் விதித்த இங்கிலாந்து... title=

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா விவகாரத்தில் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு ரூ.4.72 கோடி அபராதம் விதித்தது இங்கிலாந்து அரசு.... 

உலக அளவில் பல அமோக வலைத்தளங்கள் இயங்கி வந்தாலும் அனைத்திலும் முன்னிலையில் இருப்பது முகநூல் மட்டும் தான் என்ற கூறலாம். அமெரிக்காவைச் சார்ந்த சக்கர்பெர்க் என்பவர் கடந்த 2004 ஆம் ஆண்டு முகநூலை அறிமுகம் செய்தார். உலக மக்களிடையே பெரும் பங்கை வைக்கிறது இந்த முகநூல்.  

சமீபத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் பயனர்களின் தகவலை மூன்றாம் நபர்களிடம் பகிர்வதாக தகவல்கள் வெளியாகி பல சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது மட்டுமல்லாது தாக்கத்தையும் ஏற்படுத்தியது. இது குறித்து ஃபேஸ்புக் நிறுவனம் தொடர்ந்து பதில் தெரிவித்து வந்தது. இந்நிலையில், ஃபேஸ்புக்கை பயன்படுத்தும் 9 கோடி பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  

இது குறித்து பேஸ்புக் மீது பல்வேறு நாடுகள் விசாரணை நடத்தி வருகின்றன. வாடிக்கையாளர்களின் தகவல்களை, தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியதாக பேஸ்புக் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அந்த வரிசையில், பிரிட்டன் தகவல் தொழில்நுட்பத் துறையும் பேஸ்புக்கை விசாரித்து வந்தது. 

இந்த விசாரணையின் முடிவில், 2007 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை, சுமார் 10 லட்சம் வாடிக்கையாளர்களிடம் போதிய அனுமதி வாங்காமல், அவர்களது தனிப்பட்ட தகவல்களை, ஆப் நிறுவனங்களிடம் பேஸ்புக் வழங்கியதாக கூறப்படுகிறது. வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பாக வைக்காமல் இருந்ததாகவும் பேஸ்புக் மீது குற்றம்சாட்டப்பட்டது. 2015 ஆம் ஆண்டு, பேஸ்புக்கின் தகவல்கள் திருடப்பட்ட பின்னும் கூட, தங்களது பாதுகாப்பு கட்டமைப்பில் எந்த மாற்றமும் செய்யாமல் பேஸ்புக் இயங்கி வந்ததாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக, பேஸ்புக் மீது, அதிகபட்ச அபராதமாக, 5 லட்சம் பவுண்டுகள், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில், சுமார் 4.75 கோடி ருபாய் விதித்துள்ளது பிரிட்டன் அரசு. 

 

Trending News