பயனர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த Truecaller; இந்த வசதி நிறுத்தப்படும்

Truecaller to End this Feature: பிரபல செயலியான ட்ரூகாலர், தங்களின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று வரும் மாதத்தில் இருந்து மூடப்படும் என்று சமீபத்தில் அறிவித்துள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 23, 2022, 10:37 AM IST
  • ட்ரூகாலர் முக்கிய அறிவிப்பு
  • முக்கிய அம்சம் நிறுத்தப்பட உள்ளது.
  • கூகுள் புதிய பாலிஸி அமல்
பயனர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த Truecaller; இந்த வசதி நிறுத்தப்படும் title=

பிரபல அழைப்பாளர் அடையாள பயன்பாடான ட்ரூகாலர் சமீபத்தில் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, இதன் கீழ் இயங்குதளத்தின் ஒரு முக்கிய அம்சம் நிறுத்தப்பட உள்ளது. அதன்படி வரும் மாதத்தில் இருந்து பயனர்கள் செயலியில் இருந்து குரல் அழைப்புகளை பதிவு செய்ய முடியாது என்று ட்ரூகாலர் தெரிவித்துள்ளது. இந்தப் புதிய மாற்றத்தைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

ட்ரூகாலர் முக்கிய அறிவிப்பு
இந்நிலையில் ட்ரூகாலர் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, இதன் கீழ் இந்த தளத்தின் பயனர்கள் மே 11 முதல் பயன்பாட்டின் மூலம் தங்கள் அழைப்புகளை பதிவு செய்ய முடியாது. ட்ரூகாலர் தனது அறிக்கையில், இதுவரை அனைத்து பயனர்களுக்கும் அழைப்பு பதிவு அம்சம் இலவசமாக இருந்தது, ஆனால் தற்போது இந்த அம்சம் பயன்பாட்டிலிருந்து முற்றிலும் அகற்றப்படுகிறது என்று கூறியுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு பின்னால் உள்ள காரணம்
ட்ரூகாலரின் இந்த திடீர் நடவடிக்கைக்கு காரணம், கூகுளின் புதிய ப்ளே ஸ்டோர் கொள்கை தான். அதன்படி, ரிமோட் கால் ஆடியோ ரெக்கார்டிங்கிற்கு அணுகல்தன்மை ஏபிஐ ஐக் கோர முடியாது, அதாவது அழைப்புப் பதிவுக்கான அனுமதிகளைப் பெற பயன்பாடுகளுக்கு விருப்பம் இருக்காது.

மேலும் படிக்க | குறைந்த செலவில் வாட்ஸ்அப் அழைப்பை செய்ய சுலபமான வழி

கால் எவ்வாறு ரெக்கார்ட் செய்வது
ட்ரூகாலர் மற்றும் பிற ஆப்ஸிலிருந்து இந்த அம்சத்தை அகற்றிய பிறகு கால் எவ்வாறு ரெக்கார்ட் செய்வது என்ற குழப்பம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. அதன்படி இதற்கு தீர்வாக கால் ரெக்கார்ட் செய்யும் வசதியைக் கொண்ட ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தலாம். என்வே இந்த புதிய பாலிஸி அமலுக்கு வந்த பிறகும் இந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம். மூன்றாம் தரப்பு பயன்பாடுகளுக்கு மட்டுமே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இனி கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள அனைத்து கால் ரெக்கார்டிங் அப்ளிகேஷன்களும் வரும் மே 11ஆம் தேதி முதல் தடை செய்யப்படும். அதேபோல் தற்போது போன்களில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள இதுபோன்ற அப்ளிகேஷன்கள் வேலை செய்யாது. எனவே, இனி பயணாளர்கள் தங்களின் செல்போனில் உள்ள பில்ட் இன் கால் ரெக்கார்டிங் வசதியை மட்டுமே பயன்படுத்த முடியும். உங்கள் போனில் அவ்வாறு பில்ட் இன் கால் ரெக்கார்டிங் வசதி இல்லை என்றால் இனி மே 11ஆம் தேதிக்குப் பின் கால் ரெக்கார்டு செய்ய முடியாத சூழல் ஏற்படலாம்.

மேலும் படிக்க | வாய்ஸ் மூலம் கூகுள் பேவில் பேமண்ட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News