10 லட்சம் கார்களை விற்பனை செய்து டெஸ்லா சாதனை!

2020ஐ விட 2021-ல் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து டெஸ்லா நிறுவனம் சாதனை படைத்துள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 3, 2022, 03:52 PM IST
  • 2020-ஐ காட்டிலும் 2021-ல் டெஸ்லா விற்பனை 87% அதிகரித்து இருக்கிறது.
  • டெஸ்லா நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் அதன் விற்பனை சதவீதத்தி 50% அதிகரிப்பதையே திட்டமாக கொண்டுள்ளது.
10 லட்சம் கார்களை விற்பனை செய்து டெஸ்லா சாதனை! title=

கடந்த 2021-ல் டெஸ்லா (Tesla) நிறுவனம் 936,172 வாகனங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.  2020-ஐ காட்டிலும் 2021-ல் இதன் விற்பனை 87% அதிகரித்து இருக்கிறது.  2020-ல்  499,550 வாகனங்களை டெஸ்லா விற்பனை செய்துள்ளது.  2021-ன் இறுதி காலாண்டில் இந்நிறுவனம் 308,600 கார்களை விற்பனை செய்து இருக்கிறது.  பல சவால்கள் இருந்தபோதிலும் இந்நிறுவனம் விற்பனையில் சாதனை நிகழ்த்தியுள்ளது.  அவ்வாறு டெலிவரி செய்யப்பட்ட வாகனங்களில் மாடல் S மற்றும் X ஆகியவைகளில் 11750 கார்களும், மாடல் 3 மற்றும் Y ஆகியவைகளில்  296,850 கார்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.   மற்றவைகளுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட  936,172 வாகனங்களில் 3 மற்றும் Y ஆகிய மாடல்கள் அதிகளவு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.   S மற்றும் X ஆகிய மாடல்களில்  24,964 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கிறது.

ALSO READ | Super Power SUV: ஒருமுறை சார்ஜ் செய்தால் 536 கிமீ மைலேஜ்

டெஸ்லா நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் அதன் விற்பனை சதவீதத்தி 50% அதிகரிப்பதையே திட்டமாக கொண்டுள்ளது.  கடந்த ஆண்டில் கார்கள் விற்பனை 1 மில்லியனை எட்டாவிட்டாலும், இந்நிறுவனம் அதன் இலக்கான 50% அதிக விற்பனையை எட்டிவிட்டது.  கடந்த நவம்பர் மாதத்தில் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலன் மஸ்க் தொழிலார்களிடம் காலாண்டு இறுதிக்குள் டெலிவரி செய்வதை நிறுத்திவிட்டு செலவுகளை குறைப்பதில் கவனம் செலுத்துமாறு கூறினார்.

tesla

அதிகரித்து வரும் சிப் பற்றாக்குறை காரணமாக பல கார் நிறுவனங்களும் தங்களது பிரேக்குகளை பம்ப் செய்துள்ளது.  இந்த பற்றாக்குறையை தணிக்க டெஸ்லா தனது மென்பொருளை சீரமைத்தது.  பின்னர் பிப்ரவரி மாதத்தில் கலிபோர்னியாவில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தியை நிறுத்தியது.  மேலும் இத்தகைய பற்றாக்குறை காரணமாக சில வாகனங்களில் USB ports காணவில்லை என்றும் சில புகார்கள் எழுந்தது.  Hertz கார் நிறுவனம் டெஸ்லாவுடன் இணைந்த பிறகு அக்டோபர் மாதத்திலிருந்து ட்ஸ்லாவின் மதிப்பு $1 ட்ரில்லியனை தாண்டியது.  2021-ன் மூன்றாவது காலாண்டில் இதுவரை இல்லாத லாபத்தை இந்நிறுவனம் எட்டியுள்ளது.

ALSO READ | Hyundai; SUV விற்பனையில் கோலோச்சும் ஹூண்டாய்..! இந்த ஆண்டுக்கும் ப்ளான் ரெடி..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News