உங்கள் வேலையை எளிதாக்கும்... சில முக்கிய Gmail அம்சங்கள்

தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் ஜிமெயில் என்னும் பிரபலமான மின்னஞ்சல் சேவையில்,  உங்கள் வேலையை எளிதாக்கும் பல அம்சங்கள் உள்ளன. அதனை , அறிந்து கொண்டால் அதன் பயன்பாடு மிகவும் எளிதாகிவிடும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 8, 2024, 07:29 PM IST
  • ஜிமெயில் மிகவும் பிரபலமான மின்னஞ்சல் சேவை.
  • பயனரின் பணியை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஜிமெயிலின் சில அம்சங்கள்.
  • கூகுளால் உருவாக்கப்பட்ட ஜிமெயில் சேவை மூலம் மின்னஞ்சல்களை அனுப்பவும் பெறவும் முடியும்.
உங்கள் வேலையை எளிதாக்கும்... சில முக்கிய Gmail அம்சங்கள் title=

தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் ஜிமெயில் என்னும் பிரபலமான மின்னஞ்சல் சேவையில்,  உங்கள் வேலையை எளிதாக்கும் பல அம்சங்கள் உள்ளன.  கூகுளால் உருவாக்கப்பட்ட இந்த ஜிமெயில் சேவை மூலம் மின்னஞ்சல்களை அனுப்பவும் பெறவும் முடியும். இதன் மூலம் முக்கியமான ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள முடிவதோடு, இது நம் அன்றாட தொழில் சார்ந்த பணிகள் பலவற்றை எளிதாக்கியுள்ளது. 

பயனரின் பணியை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஜிமெயிலின் சில அம்சங்களைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம். ஏனெனில், அதைப் பற்றி பலருக்கு தெரியாமல் இருக்கலாம். இது உங்கள் வேலையை எளிதாக்கலாம். 

மின்னஞ்சல்களை திட்டமிடுதல்

பல நேரங்களில் நாம் மின்னஞ்சலை உடனடியாக அனுப்ப வேண்டிய தேவை இருக்காது. பின்னர் அனுப்ப வேண்டும் என்ற நிலையில், உங்கள் மின்னஞ்சல்களை திட்டமிட்டு அனுப்பும் வசதியை ஜிமெயில் வழங்குகிறது. அதாவது உங்கள் மின்னஞ்சல் எப்போது அனுப்ப வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம். நேரம் கிடைக்கும் போது, மின்னஞ்சலை தயார் செய்து விட்டு, அதனை நீங்கள் அனுப்ப வேண்டிய நேரத்தில் அனுப்பலாம்

மின்னஞ்சலை பிளாக் செய்தல்

வியாபார நோக்கில், ஸ்பேம் காலகள் போன்ற வரும் இமைல்களை பிளாக் செய்யலாம். குறிப்பிட்ட தலைப்பு அல்லது நபரிடமிருந்து வரும் மின்னஞ்சல்களால் எரிச்சல் ஏற்பட்டால், நீங்கள் அவர்களை பிளாக் செய்யலாம். இது உங்கள் இன்பாக்ஸை கிளீனாக வைத்திருக்க உதவுகிறது. எண்ணற்ற இமெய்கள் வந்து குவியும் போது, முக்கியமான ஈமைல்களை நம்மை அறியாமல் தவிர்த்து விடும் வாய்ப்பு உள்ளது.  எனவே,மிகவும் முக்கியமான மின்னஞ்சல்களில் கவனம் செலுத்த இந்த அம்சம் உதவுகிறது.

மேலும் படிக்க | வாட்ஸ்அப் வெறும் செய்தி அனுப்பும் செயலி மட்டுமா? மொபைலுடன் ஒன்றிவிட்ட whatsapp அம்சங்கள்

மின்னஞ்சல் தேடல் அம்சம்

ஜிமெயிலில் மின்னஞ்சல்களை தேடும் வசதி உள்ளது. உங்கள் மின்னஞ்சல்களை குறிப்பிட்ட ஏதேனும் ஒரு வார்த்தை, சொற்றொடர் அல்லது மின்னஞ்சல் முகவரி மூலம் தேடலாம். உங்கள் தேடலை மேலும் துல்லியமாக்க பில்டர்களை பயன்படுத்தலாம்.

ரகசிய முறை (Confidential Mode)

நீங்கள் தனிப்பட்ட வகையில் மின்னஞ்சலை அனுப்பிய நிலையில், அதனை யாரும் பார்க்காத வ்ண்ணம், ரகசிய பயன்முறையைப் பயன்படுத்தலாம். இந்த பயன்முறையில் நீங்கள் மின்னஞ்சலைப் படித்த பிறகு காலாவதியாக  ஆகும் படி செய்யலாம் மற்றும் மின்னஞ்சலை யாருக்கு அனுப்ப முடியாது என்பதை உறுதிப்படுத்தலாம்.

உறக்கநிலை (Snooze)

நீங்கள் மின்னஞ்சலுக்கு உடனடியாக பதிலளிக்க விரும்பாத நிலையில் இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், அந்த மின்னஞ்சலை பின்னர் படிக்க நீங்கள் உறக்கநிலையில் வைக்கலாம். மின்னஞ்சல் இன்பாக்ஸிலிருந்து அகற்றப்பட்டு, பின்னர் நீங்கள் குறிப்பிடும் நேரத்தில்க் மீண்டும் இன்பாக்ஸிற்கு திரும்பும்.

மேலும் படிக்க | கண்களை பாதிக்கும் புற ஊதாக்கதிர்களில் இருந்து தப்பிக்க 8 வழிகள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News