Smartphone Charging Tips: ஸ்மார்ட்போன் நம் வாழ்வின் முக்கிய அங்கமாகிவிட்டது. ஆனால் அதில் ஆபத்துக்களும் இல்லாமல் இல்லை. குறிப்பாக பேட்டரி காரணமாக. சரியாக சார்ஜ் செய்யாவிட்டால் போன் வெடிக்கலாம் அல்லது சேதமடையலாம். பெரும்பாலும் இரவில் முழுவதுமாக சார்ஜ் செய்யும் வழக்கம் உள்ளது. அதனை சார்ஜில் போட்டு விட்டு தூங்கி விடுகிறார்கள். இதனால் தொலைபேசியில் காலை வரை முழு சார்ஜ் செய்யப்பட்ட பிறகும், ஆன் நிலையிலே இருக்கும் . ஆனால் இது பல்வேறு விபத்துக்கு வழிவகுக்கும். இதனால் போன் வெடிக்கலாம். சில தவறுகள் தொலைபேசியை இது எந்தெந்த வழிகளில் சேதப்படுத்தலாம் என்பதையும் போன் வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
இரவு முழுவதும் போனை சார்ஜ் செய்ய வேண்டாம்
நீங்கள் ஸ்மார்ட்போனை இரவு முழுவதும் சார்ஜ் செய்தால், கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அது உங்கள் மொபைல் பேட்டரியை சேதப்படுத்தும். இதனால், போன் வெடிப்பது, சேதமடைவது என பல சம்பவங்களும் நடந்துள்ளன.
லோக்கல் சார்ஜரை விட்டு விலகி இருங்கள்
சந்தையில் பல வகையான உள்ளூர் சார்ஜர்கள் கிடைக்கின்றன. அசல் சார்ஜர் காணாமல் போன பிறகு அல்லது சேதமடைந்த பிறகு மக்கள் கம்பெனியின் சார்ஜரை வாங்காமல் உள்ளூர் சார்ஜர்களை வாங்குகிறார்கள். உள்ளூர் சார்ஜர் நீண்ட நேரம் தொலைபேசியை சார்ஜ் செய்யும் போது பேட்டரியை சூடாக்குகிறது. இதனால் பேட்டரியும் சீக்கிரம் கெடுகிறது. மேலும் இது பாதுகாப்பானது அல்ல.
முதலில் போனின் திறனைச் சரிபார்க்கவும்
இப்போது பல நிறுவனங்கள் ஸ்மார்ட்போனுடன் சார்ஜரை வழங்குவதில்லை. அப்படிப்பட்ட நிலையில் புதிதாக போன் வாங்குபவர்கள் அதன் போனின் திறன் என்ன என்பதை பார்க்க வேண்டும். அதன்படி சார்ஜரை வாங்கவும். நீங்கள் இதைச் செய்யாவிட்டால், ஸ்மார்ட்போனின் பேட்டரிக்கு அழுத்தம் ஏற்பட்டு பிராஸசரின் வேகமும் குறைகிறது. நீங்கள் மறந்தும் கூட இதுபோன்ற தவறை செய்யக்கூடாது, எப்போதும் ஸ்மார்ட்போனின் திறனுக்கு ஏற்ற சார்ஜரை வாங்கவும்.
தொலைபேசியை எப்போது சார்ஜ் செய்ய வேண்டும்
போனை திரும்ப திரும்ப சார்ஜ் செய்வது பேட்டரியில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. எனவே ஃபோனின் பேட்டரி 20 சதவீதம் அல்லது அதற்கும் குறைவாக இருந்தால் மட்டுமே அதை சார்ஜ் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இப்படி செய்வதால் பேட்டரியில் அழுத்தம் ஏற்படாது. பேட்டரி சீக்கிரம் கெட்டுப் போகாது.
மேலும் படிக்க | சாட்ஜிபிடி -ஐ வாட்ஸ்அப் உடன் இணைப்பது எப்படி? இதோ ஈஸி வழி...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ