கோடை காலத்தில் சதமடிக்கும் வெயில் போல பெட்ரோல் விலையும் சதத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.
பெட்ரோல் டீசலின் விலை உயர்வு மக்களை மின்சார வாகனங்களை நோக்கி நகர்ந்தி வருகின்றன. E பைக்களும், கார்களும் மக்களிடையே புழக்கத்தில் வந்துவிட்டன.சாலைகளில் பயணங்களின் போது முன்னர் எப்போதாவது தென்பட்ட மின்சார வாகனங்கள் இப்போது நிறையவே கண்ணில் படுகின்றன
போட்டி போட்டுக்கொண்டு மின்சார வாகன உற்பத்தியை நோக்கி நிறுவனங்கள் நகர்ந்து வரும் அதே வேளையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மின்சார வாகனங்கள் பற்றி எரிவதாக வரும் செய்திகள் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்சார வாகனங்கள் அடுத்தடுத்து பற்றி எரிவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் மின்சார வாகனங்கள் பற்றி எரிவதற்கான காரணங்கள் என்ன?
மேலும் படிக்க | இந்தியாவில் அதிகம் அறியப்படாத மின்சார ஸ்கூட்டர் பிராண்டுகள்
கடந்த இரு தினங்களுக்கு முன் வேலூர் மாவட்டம் சின்ன அல்லாபுரம் பகுதியில் சார்ஜ் போடப்பட்டிருந்த மின்சார ஸ்கூட்டர் (Electric Scooter) வெடித்ததில் தந்தையும்,13 வயதே ஆன அவரது மகளும் ஒரு சேர பலியான சம்பவம் பெருத்த சோகத்தையும் அதிர்வலைகளையும் படரச் செய்துள்ளது
திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அருகே உள்ள நரசிங்கபுரம் கிராமத்தில் தேவராஜ் என்பவர் ஏழு மாதங்களுக்கு முன்பு வாங்கிய 90 ஆயிரம் மதிப்புள்ள எலக்ட்ரிக் பைக் 28-ம் தேதி திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார ஸ்கூட்டர் திடீரென புகைந்த்துள்ளது
இப்படியான அடுத்தடுத்த சம்பவங்கள் மின்சார வாகனங்களை பயன்படுத்தி வருவோரையும்,இனி வாங்க நினைத்தோரையும் சற்று யோசிக்க வைத்துள்ளது என்றால் அது மிகையல்ல
இது குறித்து துறை சார்ந்த வல்லுனர்களிடம் கேட்ட போது, கண்டிப்பாக எதிர்காலம் என்பது E- Vehicle களின் காலம் தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை எனவும்,இது போன்ற சம்பவங்கள் விதிவிலக்கு தானே தவிர எடுத்துக்காட்டு அல்ல எனவும் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க | எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரி வெடித்து தந்தை, மகள் பலி
சந்தைக்கு E பைக்குகள் புதிது என்பதால் இதற்கான உரிய வழிகாட்டு நெறிமுறைகளும் விழிப்புணர்வும் ஏற்பட ஓரிரு ஆண்டுகள் தேவைப்படும் என தெரிவிக்கும் அவர்கள், விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இருவருக்குமே இது குறித்த புரிதல் அவசியம் என்கின்றனர்
தற்பொழுது E பைக்குகள் (E-bike) பெரும்பாலும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப் படுவதாகவும் 5 லட்ச ரூபாய் முதல் 10 லட்ச ரூபாய் கட்டினால் அதனை விற்பதற்கான டீலர்ஷிப் எளிதாக கிடைத்து விடுவதாக தெரிவிக்கும் அவர்கள், இதனை ஒழுங்குபடுத்த வேண்டிய கட்டாயம் உள்ளதாக தெரிவிக்கின்றனர்
வாடிக்கையாளர்கள் E பைக் வாங்கும் பட்சத்தில் பேட்டரி சார்ஜ் செய்வது தொடங்கி பராமரிப்பு வரை சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றவேண்டுமெனவும்,வாங்குவதற்கு முன்பாகவே மின்சார வாகன பயன்பாடு குறித்து தெரிந்து கொள்ளுதல் அவசியம் என அறிவுறுத்துகின்றனர்
மேலும் மின்சார வாகனங்கள் வாங்கும் போது நிறுவனங்கள் பயன்படுத்தும் பேட்டரி வகையை ஆராய வேண்டுமெனவும்,அதன் வெப்ப அளவு கூடும் போதோ அளவை விட அதிகமாக சார்ஜ் செய்யும்போதோ செல்களில் லீக்கேஜ் ஏற்பட்டு இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக தெரிவிக்கும் அவர்கள், திடீரென அதிகரிக்கும் மின்சார ஓவர் லோடை கட்டுப்படுத்தும் வகையில் தரமான சார்ஜர்களை பயன்படுத்த வேண்டுமென அறிவுறுத்துகின்றனர்.
மேலும் படிக்க | 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - விசிக கவுன்சிலர் போக்சோவில் கைது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR