இனி சந்தாவும் இல்லை! பிளானும் கிடையாது! ஜியோ வாடிக்கையாளர்கள் "ஷாக்"

Reliance Jio: இனிமேல் இந்த இரண்டு ஜியோ பிளானும் கிடைக்காது மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் பிரீமியம் நன்மை கிடைக்காது.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 16, 2022, 06:16 PM IST
  • டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுடன் இருந்த அனைத்து ரீசார்ஜ் திட்டங்களும் நீக்கம்.
  • ஜியோ ரீசார்ஜ் திட்டங்களுடன் ஜியோ பயன்பாடுகளின் இலவசமாக பெறலாம்.
  • Viacom 18 நிறுவனம் ஐபிஎல் ஸ்ட்ரீமிங் உரிமையை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பெற்றது.
இனி சந்தாவும் இல்லை! பிளானும் கிடையாது! ஜியோ வாடிக்கையாளர்கள் "ஷாக்" title=

ஜியோ நிறுவனம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுடன் கூடிய அனைத்து திட்டங்களையும் சில நாட்களுக்கு முன்பு நீக்கியது. ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு போர்ட்ஃபோலியோவில், டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுடன் இருந்த அனைத்து ரீசார்ஜ் திட்டங்களையும் நிறுவனம் நீக்கியுள்ளது. இருப்பினும், ரூ 1,499 மற்றும் ரூ.4,199 என இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தா அணுகல் கிடைத்தது. ஆனால் தற்போது அந்த சலுகையும் இந்த திட்டங்களில் இருந்து ஜியோ நிறுவனம் நீக்கியுள்ளது. இனி எந்த ரீசார்ஜ் திட்டத்திலும் டிஸ்னி + ஹாட்ஸ்டாரின் சந்தாவை வாடிக்கையாளர்கள் பெறமாட்டார்கள். 

டிஸ்னி + ஹாட்ஸ்டார் திட்டங்களை ஜியோ ஏன் நிறுத்தியது?
இப்போது டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவுடன் ரீசார்ஜ் திட்டத்தை பெறவேண்டும் என நீங்கள் விரும்பினால், இதற்காக நீங்கள் ஏர்டெல் அல்லது வோடாஃபோன் ஐடியா திட்டங்களை நாடலாம். 

ஜியோ பயன்பாடுகளின் இலவச சந்தா:
ஜியோ டிஜிட்டல் கன்டென்ட் பிளாட்ஃபார்மில் அதிக அளவில் முதலீடு செய்து வருகிறது. எனவே நிறுவனம் அதன் ரீசார்ஜ் திட்டங்களுடன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்க விரும்பவில்லை. தற்போது வாடிக்கையாளர்கள் ஜியோ ரீசார்ஜ் திட்டங்களுடன் ஜியோ பயன்பாடுகளின் இலவச சந்தாவைப் பெறுவார்கள்.

மேலும் படிக்க: Whatsapp புதிய அம்சம்: இனி பயனர்களுக்கு டென்ஷன் இல்லை

ஐபிஎல் ஸ்ட்ரீமிங் உரிமையை பெற்ற Viacom 18 நிறுவனம்:
ஜியோ நிறுவனம் எந்த OTT சந்தாவையும் வழங்கவில்லை. ஆனால் விரைவில் ஜியோ அதன் ரீசார்ஜ் திட்டங்களில் புதிய OTT தளத்தை சேர்க்கலாம். அதாவது Viacom 18 நிறுவனம் ஐபிஎல் ஸ்ட்ரீமிங் உரிமையை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வாங்கி உள்ளது. Viacom 18 நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (RIL) நிறுவனத்துக்கு க்கு சொந்தமானது.

ஜியோவால் நீக்கப்பட்ட இரண்டு திட்டங்கள் என்ன?
ஜியோ நிறுவனம் தனது போர்ட்ஃபோலியோவில் இருந்து ரூ.1499 மற்றும் ரூ.4199 ஆகிய இரண்டு ரீசார்ஜ் திட்டங்களை நீக்கியுள்ளது. இந்த இரண்டு திட்டங்களுடன் டிஸ்னி + ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவை வாடிக்கையளர்கள் பெற்று வந்தனர். தற்போது அது கிடையாது.

ரூ.1499 ரீசார்ஜ் திட்டத்தில், பயனர்கள் தினசரி 2ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு பலன்களைப் பெறுவார்கள். இதன் மூலம், பயனர்கள் 1 வருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவைப் பெறுகிறார்கள். இந்த ரீசார்ஜ் திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 84 நாட்கள்.

மறுபுறம், ரூ. 4199 ரீசார்ஜ் திட்டத்தைப் பற்றி பேசுகையில், பயனர்கள் தினசரி 3 ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் 1 வருடத்திற்கு வரம்பற்ற குரல் அழைப்புகளைப் பெறுகிறார்கள். இதன் மூலம், பயனர்கள் ஜியோ பயன்பாடுகளின் சந்தா மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவை ஓராண்டுக்கு கிடைக்கும்.

மேலும் படிக்க: Jio Fiber அசத்தும் நன்மைகள்: 300 Mbps வேகம், இலவச Netflix, Amazon Prime

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News