போக்கோ நிறுவனத்தின் X3 ப்ரோ ஸ்மார்ட்போன் பிரீமியம் மிட்-ரேன்ஜ் பிரிவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர் கொண்டிருக்கும் X3 ப்ரோ ஸ்மார்ட்போன் பிளாக்ஷிப் தர செயல்பாட்டை வழங்குகிறது.
சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கும் போக்கோ X3 ப்ரோ இந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் விற்பனைக்கு வந்தது.போகோ X3 சாதனம் 6.67 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 1080 x 2400 பிக்சல்கள் கொண்டுள்ளது. போக்கோ X3 இயங்குளதம் ஆண்ராய்டு 10 ஆக உள்ளது.6 GB LPDDR4X ரேம் 64 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 256 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது. இந்த நிலையில், தனது போக்கோ X3 ப்ரோ ஸ்மார்ட்போன் வெடித்து சிதறியதாக வாடிக்கையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜூன் 15-ம் தேதி வாங்கிய புதிய போக்கோ X3 ப்ரோ செப்டம்பர் 4-ம் தேதி வெடித்ததாக அவர் தெரிவித்தார். ஸ்மார்ட்போன் சார்ஜரில் இணைத்த 5-வது நிமிடம் ஸ்மார்ட்போன் வெடித்து சிதறியதாக அவர் மேலும் தெரிவித்தார். இத்துடன் வெடித்த நி்லையில் உள்ள ஸ்மார்ட்போன் மற்றும் அதனை வாங்கிய கட்டண ரசீது உள்ளிட்டவைகளையும் அவர் இணையத்தில் வெளியிட்டார். ஸ்மார்ட்போன் வெடித்த சம்பவத்திற்கு போக்கோ தரப்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
I just bought the phone 2 month ago and look at this phone got blast firstly charging 100% than i remove charger than 5 min later blast .shame on uh poco and mi and if uh can not replace this phone i will file case against you @POCOGlobal @IndiaPOCO @MiIndiaSupport @MiIndiaFC pic.twitter.com/BpDrt9hNdU
— Ammybhardwaj (@Ammybhardwaj13) September 4, 2021
ALSO READ ஆப்பிள் நிறுவனத்தின் அசத்தல் வெளியீடு! பெண்களுக்கென்று பிரத்யேகமான ஸ்மார்ட்வாட்ச்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR