பாஸ்வேர்டுகளுக்கு பாதுகாப்பில்லை...இனி பாஸ்கீகள் பயன்படுத்துங்கள்..!

ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் ஏஐ தொழில்நுட்பமாக டெக் உலகம் மாறிக் கொண்டு வருவதால், இனி பாஸ்வேர்டுகளுக்கு பாதுகாப்பில்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இதனால், பாஸ்வேர்டுகளுக்கு பதிலாக பாஸ்கீக்களை பயன்படுத்துவது சிறந்து என்கின்றனர் டெக் வல்லுநர்கள்.   

Written by - S.Karthikeyan | Last Updated : May 7, 2023, 06:58 AM IST
  • ஏஐ காலத்தில் இணைய பாதுகாப்பு கேள்விக்குறி
  • பாஸ்வேர்டுகளுக்கு பதிலாக பாஸ்கீ மாறுங்கள்
  • பாஸ்கீ முக்கியத்துவமும், அவசியத்தையும் தெரிந்து கொள்வோம்
பாஸ்வேர்டுகளுக்கு பாதுகாப்பில்லை...இனி பாஸ்கீகள் பயன்படுத்துங்கள்..! title=

ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறவு தொழில்நுட்பங்கள் டெக் உலகை ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டன. இனி எல்லாமே செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலேயே டெக் உலகம் இயங்கும் என்ற நிலை உருவாகிவிட்டதால், இங்கு பாஸ்வேர்டுகளுக்கு எல்லாம் பாதுகாப்பில்லை என்ற சூழலும் உருவாகிவிட்டது. தனிநபர் ஒருவரின் அனைத்து சோஷியல் மீடியா அக்கவுண்டுகளின் பாஸ்வேர்டுகளையும் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அறிந்து கொள்ள முடியும் அல்லது ஹேக்கிங் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

இது இணைய உலகில் இருக்கும் மிகப்பெரிய ஆபத்து என்றாலும் ஏஐ தொழில்நுட்பங்கள் தவிர்க்க முடியாத இடத்தை இப்போது பிடித்துவிட்டன. அதனால், சோஷியல் மீடியா மற்றும் இணையத்தில் இயங்குபவர்கள் அனைவரும் தங்களின் கணக்குகளுக்கு பாஸ்வேர்டுகளுக்கு பதிலாக பாஸ்கீக்களை பயன்படுத்துவதே சிறந்தது. இதன் மூலம் உங்களின் சமூக ஊடக கணக்குகளை பாதுகாப்பாக வைக்க முடியும். கூகுள் நிறுவனம் ஏற்கனவே பாஸ்கீக்களை அறிவித்துள்ளது. 

பாஸ்கீ (Passkey) என்றால் என்ன?

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் – பாஸ்கீஸ் (Passkeys) என்பது பாஸ்வேர்ட்களுக்கான (Passwords) ஒரு பாதுகாப்பான மாற்று ஆகும். ஏனென்றால் பாஸ்வேர்ட்கள் ஆனது திருடப்படலாம்; ஹேக் (Hack) செய்யப்படலாம்; ஃபிஷ் (Phish) செய்யப்படலாம். அது மட்டுமில்லாமல் நம்மில் பலரும், மிகவும் எளிமையான மற்றும் யூகிக்கக்கூடிய பாஸ்வேர்ட்களையே பயன்படுத்தி வருகிறோம். எனவே தான், மக்கள் பாஸ்வேர்ட்களுக்கு பதிலாக பாஸ்கீகளை பயன்படுத்த வேண்டும் என்று கூகுள் விரும்புகிறது.

மேலும் படிக்க | வெறும் ரூ.1299க்கு Galaxy A14 5G ஸ்மார்ட்போன்! வாங்குவது எப்படி?

பாஸ்கீ மிகவும் பாதுகாப்பானதா?

கூகுள் அறிக்கையின்படி, பாஸ்கீகளை மீண்டும் பயன்படுத்த முடியாது, அது சர்வர் மீறல்களின் (Server breaches) வழியாக லீக் ஆகாது. ஃபிஷிங் அட்டாக்களில் இருந்து உங்களை வெகுதூரம் கொண்டு செல்லும். அதுமட்டுமின்றி பாஸ் கீ-யில் இன்னொரு நல்ல விஷயமும் உள்ளது. அது என்னவென்றால், அவைகளை பல்வேறுவிதமான ஆப்ரேட்டிங் சிஸ்டம்ஸ் (Operating Systems) மற்றும் ப்ரவுசர்களில் (browser) வேலை செய்யும். மேலும் வெப்சைட்டுகள் மற்றும் ஆப்கள் என இரண்டிலுமே பயன்படுத்தலாம். 

பாஸ்கீஸ் – யாரெல்லாம பயன்படுத்தலாம்?

கூகுள் க்ரோமில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பாஸ்கீ-களை பயன்படுத்த விரும்புபவர்கள், தங்களது க்ரோம்-ஐ லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு அப்டேட் செய்யுமாறு பரிந்துரைக்கப்படுகிறார்கள். தற்போது இது Windows 11, macOS மற்றும் Android-ல் கிடைக்கிறது. ஆக எந்தெந்த வலைதளங்கள் மற்றும் ஆப்கள் ஆனது பாஸ்கீக்கான ஆதரவை வழங்குகிறதோ அவைகளில் அதை பயன்படுத்த முடியும். 

பாஸ்வேர்டுகள் இனி வேண்டாமா?

அப்படி சொல்லிவிட முடியாது. ஏனென்றால் பாஸ்கீஸ் என்பது இது பாஸ்வேர்ட்களை மாற்றுவதற்கான ஒரு ஆரம்ப கட்டமே ஆகும். கூகுளும் கூட இதையே தான் சொல்கிறது. கூகுளின் கூற்றுப்படி, இந்த மாற்றம் நடந்துகொண்டிருக்கும் அதேவேளையில், பாஸ்வேர்ட்கள் தொடர்ந்து நம் வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கும். அதாவது கூகுள் பாஸ்வேர்ட் மேனேஜர் (Google Password Manager) ஆனது வழக்கம் போல செயல்படும். பாதுகாப்பான மற்றும் எளிமையான லாக்-இன்களை வழங்கும். அதாவது எல்லா டெவலப்பர்களும் தங்கள் ஆப்ஸ் மற்றும் இணையதளங்களில் பாஸ்வேர்ட்களுக்கு பதிலாக பாஸ்கீகளை ஏற்க சிறிது காலம் ஆகும். அதுவரையிலாக பாஸ்வேர்ட்களின் பயன்பாடும் தொடரும். எனவே பயனர்கள் பயப்பட வேண்டாம்.

மேலும் படிக்க | எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ள Google Pixel Fold டீசர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News