சந்தையை கலக்க வருகிறது Oppo-வின் புதிய ஸ்மார்ட்போன்: விவரங்கள் இதோ

OPPO Reno 8 Pro Specifications Leaked: ஓப்போ ரீனோ 8 சீரிஸ் என்ற புதிய ஸ்மார்ட்போன் தொடரை சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 19, 2022, 04:44 PM IST
  • ஓப்போவின் புதிய ஸ்மார்ட்போன் சீரிஸ், ஓப்போ ரீனோ 8 மே 23 அன்று சீனாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
  • தொடரின் சிறந்த மாடலான ஓப்போ ரீனோ 8 சீரிஸ் ப்ரோ, TENAA பட்டியலில் காணப்பட்டது.
  • இந்த போனின் விவரக்குறிப்புகளை இங்கே காணலாம்.
சந்தையை கலக்க வருகிறது Oppo-வின் புதிய ஸ்மார்ட்போன்: விவரங்கள் இதோ title=

ஓப்போ ரீனோ 8 தொடர் விவரக்குறிப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி: ஓப்போ ஒரு மிக பிரபலமான ஸ்மார்ட்போன் பிராண்டாகும். சிறந்த அம்சங்கள் கொண்ட மற்றும் மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன்களை உருவாக்கும் இந்த பிராண்ட், இப்போது ஓப்போ ரீனோ 8 சீரிஸ் என்ற புதிய ஸ்மார்ட்போன் தொடரை சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. 

இந்த தொடரில் ஓப்போ ரீனோ 8 மற்றும் ஓப்போ ரீனோ 8 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்கள் இருக்கும். இவை வரும் நாட்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இந்த ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதி மற்றும் எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

ஓப்போ ரீனோ 8 தொடர் அறிமுகப்படுத்தப்பட உள்ளது 
ஓப்போவின் புதிய ஸ்மார்ட்போன் சீரிஸ், ஓப்போ ரீனோ 8 மே 23 அன்று சீனாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்தத் தொடரின் சிறந்த மாடலான ஓப்போ ரீனோ 8 சீரிஸ் ப்ரோ, TENAA பட்டியலில் காணப்பட்டது. அதன் அனைத்து அம்சங்களைப் பற்றிய தகவல்களும் பெறப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்பதை காணலாம். 

மேலும் படிக்க | Vivo X80-ல் கிடைக்கிறது பம்பர் தள்ளுபடி: முழு விவரம் இதோ 

ஓப்போ ரீனோ 8 ப்ரோ செயலி (ப்ராசசர்)
நாங்கள் உங்களுக்கு முன்பே கூறியது போல், இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் TENAA பட்டியல் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போனின் செயலியைப் பற்றி பேசுகையில், இது மீடியாடெக் டைமென்சிடி 8100-மேக்ஸ் சிப்செட்டில் வேலை செய்யும். இந்த ஸ்மார்ட்போன் ப்ரீ-ஆர்டருக்காக பட்டியலிடப்பட்டுள்ள ஓப்போ சீனாவின் இணையதளத்தில், இந்த ஸ்மார்ட்போன் மூன்று சேமிப்பு வகைகளில் கிடைக்கிறது. இதை 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வகைகளில் வாங்கலாம்.

ஓப்போ ரீனோ 8 ப்ரோ: பிற அம்சங்கள்

பட்டியலின் படி, ஓப்போ ரீனோ 8 ப்ரோவில் 6.7-இன்ச் அமோல்ட் டிஸ்ப்ளே, 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் முழு எச்டி + ரெசல்யூஷன் 1080 x 2412 பிக்சல்களைப் பெறலாம். இந்த ஸ்மார்ட்போனில், பயனர்களுக்கு 32எம்பி முன்பக்க கேமரா மற்றும் மூன்று பின்புற கேமரா அமைப்பு கொடுக்கப்படலாம். 

பின்புற கேமராவின் முக்கிய சென்சார் 50எம்பி ஆக இருக்கும். மற்றும் இதில் 8எம்பி அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 2எம்பி மேக்ரோ கேமரா கொடுக்கப்படலாம். பேட்டரியைப் பற்றி பேசுகையில், ஓப்போ ரீனோ 8 ப்ரோ ஆனது 4500mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரக்கூடும். இந்த ஸ்மார்ட்போன் ஆண்டிராய்ட் 12 ஓஎஸ்-ல் வேலை செய்யும்.

அதிகாரப்பூர்வமாக, ஓப்போ ரீனோ 8 சீரிஸ் பற்றி எந்த தகவலும் இன்னும் வரவில்லை. மேலும் அதன் விலை குறித்தும் தற்போது எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.

மேலும் படிக்க | உங்க ஃபேஸ்புக் அக்கவுண்ட் 'ஹேக்' செய்து விட்டார்களா? உடனே Recover செய்வது எப்படி? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News