OnePlus Nord CE 4: ஒன்பிளஸ் வாங்கினா செல்பி ஸ்பெஷலிஸ்ட் ஆகலாம்! பட்ஜெட் விலை தான்

OnePlus Nord CE 4: ஒன்பிளஸ் நோர்டு ஸ்மார்ட்போன் 16 எம்பி செல்பி கேமராவுடன் வர இருக்கிறது. பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் இந்த ஸ்மார்ட்போனுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 15, 2024, 01:45 PM IST
  • ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய மொபைல்
  • OnePlus Nord CE 4 மொபைலின் சிறப்பம்சங்கள் இதுதான்
  • 16 எம்பி செல்பி கேமரா இருப்பதாக லீக்கான தகவல்
OnePlus Nord CE 4: ஒன்பிளஸ் வாங்கினா செல்பி ஸ்பெஷலிஸ்ட் ஆகலாம்! பட்ஜெட் விலை தான் title=

ஒன்பிளஸ் நிறுவனம் ஏப்ரல் 1 ஆம் தேதி OnePlus Nord CE 4 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை குறித்த விவரங்கள் எல்லாம் லீக்காகியுள்ளது. அதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் பட்ஜெட் செக்மெண்டில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது. 

ஒன்பிளஸ் நோர்டு சிஇ4 விலை

ஒன்பிளஸ் நிறுவனத்தின் நோர்டு சீரிஸில் ஒன்பிளஸ் நோர்ட் CE 4 5ஜி (OnePlus Nord CE 4 5G) ஸ்மார்ட்போன் ஏப்ரல் 1 ஆம் தேதி மாலை 6 மணிக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. செல்போன் யூசர்களை கவரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த விழாவில் ஒன்பிளஸ் நோர்டு சிஇ4 குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை ஒன்பிளஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது. அதற்கு முன்பாகவே இணையத்தில் கசிந்திருக்கும் தகவல்களின்படி, இந்த மொபைல் 27 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது. 

மேலும் படிக்க | இந்தியாவில் Samsung Galaxy A35 5G மற்றும் Galaxy A55 5G விலை விவரம் வெளியானது

ஒன்பிளஸ் நோர்டு சிஇ4 சிறப்பம்சம்

ஒன்பிளஸ் நோர்டு சிஇ4 , குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 7+ Gen 3 SoC) உடன் வெளிவருகிறது. 6.72 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 1800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் அம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கும்.

ஒன்பிளஸ் நோர்டு சிஇ4 கேமரா

ஒன்பிளஸ் நோர்டு சிஇ4 ஸ்மார்ட்போன் 50MP + 8MP கொண்ட டூயல் ரியர் கேமரா அமைப்பை கொண்டிருக்கும். முன்பக்கத்தில்16MP செல்பி கேமராவை கொண்டிருக்கும். செல்பி பிரியர்களுக்கு இந்த மொபைல் வரப்பிரசாதமாக இருக்கும். அத்துடன் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 சிப்செட், அட்ரினோ 732 ஜிபியு (Adreno 732 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆகியவை இருக்கும். இந்த ஸ்மார்ட்போனிஇன் ஸ்டோரேஜ் பற்றி பேசுகையில், 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் வெளிவரும் என்றும், இதில் இந்த முறை மெமரி கார்டு வசதியும் இருக்க கூடும் என்றும் கூறப்படுகிறது.

ஒன்பிளஸ் நோர்டு சிஇ4 பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி உடன் 100W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வெளிவர இருக்கிறது. மொபைலின் கலர் பொறுத்தவரையில் இரண்டு நிறங்களில் வர இருக்கிறது. ஒன்பிளஸ் நார்ட் CE 4 5ஜி ஒரு மாடல் மின்ட் (mint) கலரிலும், மற்றொன்று கிரே (grey) கலரிலும் இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க | ஆபாசமான 18 OTT தளங்களுக்கு அதிரடி தடை... ஏன் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News