சென்னை: சர்வதேச மொபைல் நிறுவனமான ஒன் பிளஸ் சென்னையில் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு நேற்று முதலாம் ஆண்டு விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரபலம் மற்றும் இளம் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் கலந்துக் கொண்டார்.
தங்கள் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கவும், ஒன் பிளஸ் குறித்து மேலும் அறிந்துக்கொள்ளும் விதமாக முதல் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கலந்துக்கொண்ட வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு ஊக்கமாக இருந்திருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், தனது இசையமைப்பில் உருவான சில பாடல்களை பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அவர்களுக்கு ஆட்டோகிராப் வழங்கினார். மேலும் அவர் "ஒன் பிளஸ் ப்ரோ 7" என்ற புதிய மாடல் போனையும் அறிமுகம் செய்து வைத்தார்.
ஒன் பிளஸ் நிறுவனத்தின் முதலாமாண்டு நிகழ்ச்சி குறித்து பேசுகையில், என்னை இங்கு அழைத்ததுக்கு "ஒன் பிளஸ்" நிறுவனத்திற்கு நன்றி. என் இசையை விரும்பும் ரசிகர்களை சந்திக்க எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு இதுவாகும். ஒன்பிளஸ் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தொழில்நுட்பத்தை வழங்குவதை போல, எனது ரசிகர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க தொடர்ந்து கடினமாக உழைப்பேன் என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய ஒன் பிளஸ் இந்தியாவின் பொதுமேலாளர் விகாஸ் அகர்வால் கூறியது, "இந்தியாவில் எங்கள் பயணத்தின் மைல் கல்லாக இந்த ஆண்டுவிழாவை நாங்கள் பார்க்கிறோம். எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் ஒன் பிளஸ் ரசிகர்கள் ஆகியோருக்கு ஒரு முழுமையான அனுபவத்தை வழங்கும் முயற்சிகளின் ஒரு பகுதியே இந்த கொண்டாட்டங்கள். வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில் தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்க்கொள்வதே எங்கள் நோக்கமாகும். இந்த சந்தர்ப்பத்தை உங்களுடன் கொண்டாடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் எனக் கூறினார்.
ஒன் பிளஸ் மிக வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் சென்னை ஒன்றாகும். தனது முதல் கடையை சென்னையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2018 இல் திறந்தது. நேற்றுடன் ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. 2019 ஆம் ஆண்டிற்கான சூப்பர் பிராண்டாகவும் ஒன் பிளஸ் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.