பேட்டரி சிக்கல்களால் 3,215 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை திரும்பப் பெறும் ஒகினாவா

சில மின்சார ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து, பேட்டரி சிக்கல்களைச் சரிசெய்ய ஒகினாவா 3,215 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை திரும்பப் பெறுகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 17, 2022, 06:46 PM IST
  • பேட்டரி சிக்கல்களை சரிபார்க்கும் ஒகினாவா
  • 3,215 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை திரும்பப் பெறும் ஸ்கூட்டர் கம்பெனி
  • பேட்டரியால் தீப்பிடித்ததா மின்சார ஸ்கூட்டர்கள்? ஆய்வு மேற்கொள்ளும் ஒகினாவா
பேட்டரி சிக்கல்களால் 3,215 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை திரும்பப் பெறும் ஒகினாவா title=

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளரான ஒகினாவா பேட்டரி பிரச்சனைகளை சரிபார்த்து சரிசெய்ய 3,215 யூனிட்களை திரும்பப் பெறுகிறது.

இந்த முயற்சியானது நிறுவனத்தின் விரிவான பவர் பேக் பரிசோதனை முகாம்களின் ஒரு பகுதியாகும் என்று ஒகினாவா வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மின்சார இரு சக்கர வாகனங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளரான ஒகினாவா பேட்டரி பிரச்சனைகளை சரிபார்த்து சரிசெய்ய 3,215 யூனிட்களை திரும்பப் பெறுகிறது.

"பேட்டரிகளின் இணைப்புகள் தளர்வானதாக உள்ளதா அல்லது ஏதேனும் சேதம் உள்ளதா என சோதிக்கப்படும் என்று நிறுவனம் கூறுகிறது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், இந்தியாவில் உள்ள ஒகினாவா அங்கீகரிக்கப்பட்ட டீலர்களிடம் சென்று, மின்சார ஸ்கூட்டரை இலவசமாக சரி செய்துக் கொள்ளலாம்" என்று ஒகினாவா ஆட்டோடெக் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | Okinawa OKHI-90 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் அறிமுகமானது! விலை மற்றும் அம்சங்கள்

எலெக்ட்ரிக் இரு சக்கர வாகன தயாரிப்பாளர், அதன் வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப பழுதுபார்க்கும் அனுபவத்தை உறுதி செய்வதற்காக, அதன் டீலர் பார்ட்னர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுகிறது, அதற்காக வாகன உரிமையாளர்களை தனித்தனியாகத் தொடர்பு கொள்ளப் போவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. 

"இந்த தன்னார்வ முன்னெடுப்பு, அண்மையில் சில மின்சார ஸ்கூட்டர்கள் தீப்பிடித்த சம்பவத்தை அடுத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் பாதுகாப்பிற்கான நிறுவனத்தின் நீண்டகால உறுதிப்பாட்டிற்கு இணங்க இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன" என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

tech

புனேவில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அறிமுகப்படுத்திய இ-ஸ்கூட்டர் தீப்பிடித்ததை அடுத்து, கடந்த மாதம் அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது.

மேலும் படிக்க | டாப் 5 மின்சார ஸ்கூட்டர்கள்: விலை, பிற விவரம் இதோ

திடீரென த மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் (CFEES) இந்த சம்பவத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகளை ஆய்வு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது, மேலும், இதற்கான தீர்வு நடவடிக்கைகளை பரிந்துரைக்க வேண்டும் என சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது.

இ-ஸ்கூட்டர் தீப்பற்றி எரிந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவியதை அடுத்து, வாகனத்தின் பாதுகாப்புத் தரங்கள் குறித்து பயனர்கள் கேள்வி எழுப்பியதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

மற்றொரு எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான ஜிதேந்திரா நியூ ஈவி டெக், அதன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை கன்டெய்னர் டிரக்கில் கொண்டு செல்லும்போது தீப்பிடித்ததற்கான காரணத்தை ஆராய்ந்து வருகிறது.

இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் நாசிக்கில் உள்ள நிறுவனத்தின் தொழிற்சாலை வாயில் அருகே ஏப்ரல் 9 ஆம் தேதி நடந்தது.

மேலும் படிக்க | BMW F 900 XR பைக் இந்தியாவில் அறிமுகம்! விலை மற்றும் சிறப்பம்சங்கள்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News