Netflix பயனர்களுக்கு ஷாக்: இனி இதை செய்ய முடியாது, புதிய அம்சம் அறிமுகம்!!

Netflix: ஒருவர் நெட்பிளிக்ஸ் சந்தாவை வாங்குவதும், அவரது 6-7 நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அந்த கணக்கை பயன்படுத்துவதும் பொதுவாக நடக்கும் ஒரு விஷயமாகும். ஆனால், இனி அப்படி நடக்க முடியாது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 20, 2022, 12:39 PM IST
  • மற்ற நாடுகளை விட இந்தியாவில் அதிகமான மக்கள் நெட்ஃபிளிக்ஸை இலவசமாக இயக்குகிறார்கள் என்று நெட்ஃபிக்ஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
  • கணக்கு வைத்திருப்பவருக்குத் தெரிந்தோ தெரியாமலோ, பலர் இலவசமாக நெட்பிளிக்சின் நன்மையை அனுபவித்து வருகிறார்கள்.
  • இத்தகைய சூழ்நிலையில், ஒரே கிளிக்கில் மற்ற பயனர்களை உங்கள் கணக்கில் இருந்து நீக்கும் வசதியை நெட்ஃபிக்ஸ் கொண்டு வந்துள்ளது.
Netflix பயனர்களுக்கு ஷாக்: இனி இதை செய்ய முடியாது, புதிய அம்சம் அறிமுகம்!! title=

நெட்பிளிக்ஸ் பயனர்களுக்கு ஒரு முக்கிய செய்தி!! ஒருவர் நெட்பிளிக்ஸ் சந்தாவை வாங்குவதும், அவரது 6-7 நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அந்த கணக்கை பயன்படுத்துவதும் பொதுவாக நடக்கும் ஒரு விஷயமாகும். இந்த வகையில் ஒரு கனெக்‌ஷன் மூலம் பலர் புதிய திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் மற்றும் பல நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கிறோம். சில சமயம், கணக்கின் பாஸ்வர்ட் நண்பர்களிடம் மட்டுமல்லாமல், நண்பர்களின் நண்பர்கள் வரை கூட செல்வதுண்டு. ஒரு முறை பாஸ்வர்ட் கிடைத்துவிட்டால், சந்தா பெற்ற நபர், பாஸ்வர்டை மாற்றும் வரை, பிறர் தங்களுக்கான சந்தாவை பெறுவது பற்றி யோசிப்பது கூட கிடையாது. 

ஆனால், இனி இப்படி செய்ய முடியாமல் போகலாம். நெட்பிளிக்ஸ் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், சந்தா கட்டிய நபர், தான் கணக்கை பகிர்ந்துகொள்ள விரும்பாதவர்களின் பெயர்களை தனது கணக்கிலிருந்து அகற்றும் வசதி அளிக்கப்படுகின்றது. 

நெட்பிளிக்ஸ்: புதிய அம்சத்தின் விவரம் என்ன? 

மற்ற நாடுகளை விட இந்தியாவில் அதிகமான மக்கள் நெட்ஃபிளிக்ஸை இலவசமாக இயக்குகிறார்கள் என்று நெட்ஃபிக்ஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. கணக்கு வைத்திருப்பவருக்குத் தெரிந்தோ தெரியாமலோ, பலர் இலவசமாக நெட்பிளிக்சின் நன்மையை அனுபவித்து வருகிறார்கள். 

இத்தகைய சூழ்நிலையில், ஒரே கிளிக்கில் மற்ற பயனர்களை உங்கள் கணக்கில் இருந்து நீக்கும் வசதியை நெட்ஃபிக்ஸ் கொண்டு வந்துள்ளது. நிறுவனம் ஒரு வலைப்பதிவு இடுகை மூலம் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | வெறும் 1000 ரூபாய்க்கு ரூ.21 ஆயிரம் மதிப்புள்ள ரியல்மீ ஸ்மார்ட்போன் 

Netflix இன் அக்கவுண்ட் செட்டிங் (Account Setting ) ஆப்ஷனில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள், தங்கள் கணக்கு எந்தெந்த சாதனங்களில் லாக் இன் செய்யப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிய முடியும். இதற்குப் பிறகு, கணக்கு வைத்திருப்பவர் விரும்பினால், அவர் கணக்கைப் பகிர விரும்பாத சாதனங்களை அகற்றி விடலாம். 

லாக் இன் செயல்பாட்டையும் (Log In Activity) கண்டறிய முடியும்

நெட்ஃபிக்ஸ் பயனர்களை அகற்றுவதற்கான புதிய அம்சத்தை மட்டும் கொண்டு வரவில்லை. இதனுடன், இப்போது இந்த புதிய அமத்தின் மூலம், உங்கள் கணக்கு எந்தெந்த சாதனங்களில் இயங்குகிறது என்பதையும் கண்டறியலாம். பொதுவாக, நாம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு இடையே மட்டுதான் பாஸ்வர்டைப் பகிர்ந்து கொள்கிறோம். எனினும், நீங்கள் சிலசமயம் வேறு இடத்திலிருந்து லாக் இன் செய்து, லாக் அவுட் செய்ய மறந்துவிட்டால், இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கும். 

Manage Access and Devices Menu மூலம், பயனர் எங்கு, எப்போது, ​​எந்த சாதனத்தில் Netflix கணக்கை இயக்குகிறார் என்பதைக் கண்டறியலாம். உலகெங்கிலும் உள்ள அனைத்து இணையம், iOS மற்றும் Android சாதனங்களில் புதிய அம்சம் வெளியிடப்பட்டுள்ளது என்பதை Netflix உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | ஆன்லைன் டெலிவரியில் அமேசானின் அடுத்த பாய்ச்சல்! இனி பொருட்கள் பறந்து வரும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News