லாவா யுவா ஸ்டார் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, லாவா பிளேஸ் 3D Curved Edge display, 64MP கேமரா மற்றும் MediaTek Dimensity 6300 ப்ராசசர் கொண்ட இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்குப் பிறகு, லாவா நிறுவனம் தனது ‘Yuva’ தொடரின் குறைந்த பட்ஜெட் மொபைல் ஒன்றை அறிமுகம் செய்தது.
Lava Yuva Star 4G
5000mAh பேட்டரியுடன் வரும் விலை குறைவான இந்த மொபைல் போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களை தெரிந்துக் கொள்வோம். இதற்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட யுவா சீரிஸின் 5ஜி ஃபோனின் 4ஜிபி+64ஜிபி வேரியண்ட் ரூ.9,499க்கும், 4ஜிபி+128ஜிபி வகை ரூ.9,999க்கும் அறிமுகமானது.
புதிய அறிமுகம்
இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள லாவா யுவா ஸ்டார் ஸ்மார்ட்போனின் புதிய மலிவு விலை போன், லாவா நிறுவனத்தின் புதிய 4ஜி ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஃபோன் 6.75 இன்ச் HD+ டிஸ்ப்ளே உடன் வருகிறது. UniSoC 9863A செயலி பொருத்தப்பட்டு, ஆண்ட்ராய்டு 14 கோ எடிஷனில் வேலை செய்யும் இந்த லாவா யுவா ஸ்டார் ஸ்மார்ட்போனில் புகைப்படம் எடுப்பதற்காக, தொலைபேசியில் 13MP முதன்மை கேமரா உள்ளது.
செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்காக 5MP கேமரா முன் பக்கத்தில் பொருத்தப்பட்டு உள்ளது. தொலைபேசியின் பேட்டரி 5000mAh திறன் கொண்டதாக உள்ளது. இதனால், 10W சார்ஜிங் கொண்ட இந்த போன் ரூ.6,499 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பகம் கொண்ட இந்த போனை சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் வாங்கலாம். ஊதா, வெள்ளை மற்றும் கருப்பு வண்ணங்களில் லாவா யுவா ஸ்டார் போன் கிடைக்கிறது.
மேலும் படிக்க | ITR Refund இன்னும் கிடைக்கவில்லையா? இவை காரணங்களாக இருக்கலாம்
லாவா யுவா ஸ்டார் போனின் சிறப்பம்சங்கள்
6.75 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி எச்டி+ டிஸ்ப்ளே கொண்டுள்ள இந்த போனில் ரெசல்யூசன் காட்சியின் தீர்மானம் 720×1600 பிக்சல்கள் என்ற அளவில் உள்ளது. இதில் புதுப்பிப்பு விகிதம் 60Hz என்பது குறிப்பிடத்தக்கது. டிஸ்ப்ளேயில் செல்ஃபி கேமராவிற்கான வாட்டர் டிராப்-நாட்ச் கட்அவுட் உள்ளது. இது தவிர, போனில் UniSoC 9863A செயலி பொருத்தப்பட்டுள்ளது.
4 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் ஆதரவுடன் இயங்கும் இந்த போனின் சேமிப்புத் திறன் 64ஜிபி என்ற அளவில் இருக்கும். இந்த போன் ஆண்ட்ராய்டு 14 கோ எடிஷனில் வேலை செய்கிறது.
புகைப்படம் எடுப்பதற்கு, தொலைபேசியில் 13MP முதன்மை கேமரா உள்ளது. அதே நேரத்தில், பின்புற கேமராவுடன் எல்இடி ப்ளாஷ் போனில் மற்றொரு AI சென்சார் வைக்கப்பட்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்காக 5எம்பி முன்பக்கக் கேமரா உள்ளது. தொலைபேசியில் சார்ஜ் செய்ய USB Type-C போர்ட் உள்ளது. ஃபோனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் பாதுகாப்பை உறுதி செய்கிறது.ஃபேஸ் அன்லாக் சிஸ்டமும் இதில் உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ