Jio's Triple Cashback - டிசம்பர் 25 வரை நீட்டிப்பு!

முன்னதாகவே இந்த சலுகைக்கு காலக்கெடு அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து தற்போது இரண்டாவது முறையாக, இந்த சலைகையானது நீட்டிக்கப்பட்டுள்ளது!

Last Updated : Dec 19, 2017, 03:29 PM IST
Jio's Triple Cashback - டிசம்பர் 25 வரை நீட்டிப்பு! title=

ரிலையன்ஸ் ஜியோ தனது "ட்ரிபில் கேஷ் பேக்" சலுகையை வரும் டிசம்பவர் 25 வரை நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது!

கடந்த நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட இந்த சலுகையின் மூலம் வாடிக்கையாளர்கள் ரூ.2599 வரை சேமிக்கமுடியும். முன்னதாகவே இந்த சலுகைக்கு காலக்கெடு அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து தற்போது இரண்டாவது முறையாக, இந்த சலைகையானது நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ-வின் இந்த சலுகையின் மூலம், வாடிக்கையாளர்கள் ரூ. 399 அல்லது அதற்கு மேல் ரீச்சார்ஜ் செய்யும் ஒவ்வொரு ரீசார்ஜிலும் ரூ. 1,899 வரை ஆன்லைன் ஷாப்பிங் வவுச்சர், 400ரூ வரையிலான கேஷ்பேக் மற்றும் 300ரூ ரீச்சார்ஜ் ஒவ்வொன்றிலும் உடனடி முழு கேஷ்பேக் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

எனினும் ஜியோ ப்ரைம் சந்தாதாரர்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும், என்பதால் ஜியோ வாடிக்கையாளர்கள் ரூ.99 செலுத்தி தங்கள் இணைப்பை ஜியோ ப்ரைம் இணைப்பாக மாற்றிக் கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது!

Trending News