வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 12, 2021, 06:50 AM IST
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட் title=

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO) பூமி கண்காணிப்புக்காக 2,268 கிலோ எடை கொண்ட ஈ.ஓ.எஸ்.03 என்ற செயற்கைகோளை வடிவமைத்து உள்ளது.  இதனை ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-10’ ராக்கெட்டில் பொருத்தி இன்று அதிகாலை 5.43 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

இயற்கை பேரழிவுகள், விவசாயம், வனவியல், கனிமவியல் மற்றும் பேரிடர் எச்சரிக்கை, ஆகியவற்றை அறிந்து கொள்வதற்காக 'ஈ.ஓ.எஸ்.-03' (EOS-3) என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோளை இஸ்ரோ (ISRO) வடிவமைத்தது.

ALSO READ | ISROவின் ஆரம்பகால முன்னோடிகளில் ஒருவரான விஞ்ஞானி ஆராவமுதன் காலமானார்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், கொரோனா பரவல் காரணமாக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் திட்டமிட்டபடி ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து, திட்டமிட்டபடி ராக்கெட்டை விண்ணில் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது.

 

 

 

இந்த ராக்கெட்டில் முதன்முறையாக வெப்பத்தில் இருந்து அதிக எடை கொண்ட செயற்கைகோள் மற்றும் அதில் உள்ள மின்னணு பொருட்களை பாதுகாப்பதற்காக ராக்கெட்டின் கூம்பு வடிவிலான முகப்பு பகுதியில் தனியாக வெப்பத்தகடுகள் பொருத்தப்பட்டு உள்ளன. கொரோனா பரவல் காரணமாக பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

ALSO READ | ISRO: ககன்யானின் விகாஸ் இன்ஜின் சோதனை வெற்றி; எலான் மஸ்க் வாழ்த்து

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News