ஐபோன் 12 இல் கிராண்ட் தள்ளுபடி: நீங்கள் ஐபோன் வாங்க விரும்பினால் இந்த செய்து உங்களுக்குத் தான். அதன்படி ஐபோனை அமேசான் தளத்தில் பம்பர் தள்ளுபடியுடன் வாங்கலாம். பொதுவாக ஐபோன் மினி மாடல்கள் அல்லது ஐபோன் எஸ்இ மாடல்கள் தான் விலை மலிவாக இருக்கும் என்று பயனர்கள் நினைத்திருப்பர். ஆனால், இங்கு ஐபோன் 12 விலை மலிவாகக் கிடைக்கிறது. அந்த வகையில் ஐபோனை எப்படி குறைந்த விலைக்கு வாங்குவது என்று பார்க்கலாம். இதில் வங்கி சலுகைகள் உள்பட, சுலப மாதத் தவணை திட்டங்கள், எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் உள்ளன.
ஐபோன் 12 இல் சலுகை:
சலுகையைப் பற்றி பேசுகையில், ஐபோன் 12 இன் 64 ஜிபி மாறுபாட்டின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. இதன் ஒரிஜினல் விலை ரூ.65,900 என்றாலும், அமேசானில் தள்ளுபடிக்குப் பிறகு ரூ.49,900க்கு வாங்கலாம். இந்த நேரத்தில் வாடிக்கையாளர்கள் 24 சதவீதம் வரை தள்ளுபடி பெறுகிறார்கள். இது மட்டுமல்லாமல், ஐபோன் 12 இன் விலையை எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் மற்றும் வங்கி சலுகைகள் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும்.
மேலும் படிக்க | ரெட்மி நோட் 12 சீரிஸ் ரிலீஸ் எப்போது?... வெளியான அப்டேட்
ஐபோன் 12 இல் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்:
எக்ஸ்சேஞ்ச் ஆஃபரைப் பற்றி பேசுகையில், ஐபோன் 12 ஐ வாங்கும்போது ரூ.14,050 சேமிப்பாக பழைய அல்லது ஏற்கனவே உள்ள போனை மாற்றிக்கொள்ளலாம். இதற்குப் பிறகு, ஐபோன் 12 ஐ 35,850 ரூபாய்க்கு வாங்கலாம். இருப்பினும், எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், எக்ஸ்சேஞ்சில் நீங்கள் வழங்கும் போனின் நிலை மற்றும் மாடல் நன்றாக இருந்தால் மட்டுமே அதன் முழுப் பலனையும் பெற முடியும்.'
ஐபோன் 12 இல் வங்கி சலுகைகள்:
வங்கி சலுகைகளைப் பற்றி பேசுகையில், ஐபோன் 12 ஐ வாங்கும்போது ஆக்ஸிஸ் வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், ஈஎம்ஐ பரிவர்த்தனைகளில் ரூ.1250 வரை சேமிக்கலாம். அதே நேரத்தில், ஆர்.பி.எல் வங்கியின் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் ஈஎம்ஐ அல்லாத பரிவர்த்தனைகளில் 750 ரூபாய் வரையிலும், ஈஎம்ஐ பரிவர்த்தனைகளில் 1,000 ரூபாய் வரையிலும் சேமிக்க முடியும். எனவே முந்துங்கள் மக்களே! இந்த ஆஃபர் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே, நீண்ட காலம் நீடிக்காது!
மேலும் படிக்க | கூகுளில் தேடக்கூடாத ‘சில’ விஷயங்கள்... மாட்டினால் கம்பி எண்ண வேண்டியது தான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ