mYoga app: ஒரு உலகம், ஒரே ஆரோக்கியம் என்ற இலக்கை அடைய புது செயலி

ஆயுஷ் அமைச்சகம் மற்றும் உலக சுகாதார அமைப்பு இணைந்து உருவாக்கிய mYoga app செயலி, யோகா பயிற்சி மற்றும் பயிற்சி அமர்வுகளை தேவைக்கு ஏற்றாற்போல் வழங்குகிறது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 21, 2021, 10:22 AM IST
  • mYoga app அறிமுகம்
  • சர்வதேச யோக தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி அறிமுகம் செய்தார்
  • பல்வேறு மொழிகளில் யோகாவை கற்றுக் கொடுக்கும் செயலி
mYoga app: ஒரு உலகம், ஒரே ஆரோக்கியம் என்ற இலக்கை அடைய புது செயலி title=

புதுடெல்லி: இன்று சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, இன்று காலை பொதுமக்களிடம் உரையாற்றினார். ஏழாவது சர்வதேச யோகா தினமான இன்று பிரதமர் நரேந்திர மோடி mYoga app செயலியை அறிமுகப்படுத்தினார்.

ஆயுஷ் அமைச்சகம் மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) இணைந்து உருவாக்கிய இந்த செயலி, யோகா பயிற்சி மற்றும் பயிற்சி அமர்வுகளை தேவைக்கு ஏற்றாற்போல் வழங்குகிறது.

பொதுவாக யோகா பயிற்சி செய்வது ஆளுக்கு ஆள் மாறுபடும். எனவே அவரவர் தேவைக்கு ஏற்றாற்போல யோகா பயிற்சிகளை மக்களுக்கு வழங்கும் நோக்கில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

Also Read | Yoga Day 2021: முழுமையான ஆரோக்கியத்தை வழங்கும் யோகா – பிரதமர் மோடி 
 
உலக சுகாதார அமைப்பு (WHO) உடன் இணைந்து, உலகெங்கிலும் உள்ளவர்களுக்கு வெவ்வேறு மொழிகளில் யோகா பயிற்சி வீடியோக்களைக் வழங்கும் mYoga app என்ற செயலி ‘ஒரு உலகம், ஒரே ஆரோக்கியம்’(One World, One Health’ motto) என்ற குறிக்கோளை அடைய உதவும்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

யோகா செய்வதற்கு கற்றுக் கொடுக்கும் இந்த செயலியை 12-65 வயதுடையவர்கள்   பயன்படுத்தலாம். சர்வதேச நிபுணர்களுடன் கலந்தாலோசித்து இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக WHO கூறுகிறது.

ஸ்மார்ட்போன் (smartphone) மூலம் மக்களுக்கு தரமான யோகா பயிற்சி கொடுப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஏப் பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது. இந்த செயலியை பயன்படுத்தும் பயனர்களிடமிருந்து எந்த தரவையும் சேகரிக்காது.

Also Read | Power of Yoga: மனோரீதியான பாதிப்பை குறைக்கும் யோகா 

தற்போது, இது பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கிடைக்கிறது. எதிர்காலத்தில் வேறு பல மொழிகளும் இந்த செயலியில் சேர்க்கப்படும். Android பயனர்கள் Google Play Store இலிருந்து mYoga பயன்பாட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு யோகாவை எளிதில் அணுகும் நோக்கில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். சர்வதேச யோக தினத்தை முன்னிட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய யோகாவை பரிந்துரைக்கின்றனர் என்று தெரிவித்தார்.

International yoga day 2021: சர்வதேச யோகா தினம் 

யோகாவின் பல நன்மைகளை விவரித்த பிரதமர், பண்டைய இந்திய நடைமுறை உலகின் அனைத்து மூலைகளிலும் மகத்தான முன்னேற்றத்தைக் கண்டதாகக் கூறினார். 

திருக்குறளை மேற்கோள் காட்டிய பிரதமர் நரேந்திர மோடி,

”நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்” என்ற திருக்குறளைச் சொல்லி அதற்கான விளக்கத்தையும் அளித்தார்.

"யோகா அதன் தடுப்பு மற்றும் மக்களின் ஆரோக்கியத்தில் நேர்மறையான பங்கை தொடரும் என்று நான் நம்புகிறேன்" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

Also Read | International Yoga Day 2021: 5000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகா கலையின் பெருமை   

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News