5ஜி-ன் வேகத்தையே இந்திய இணைய உலகம் முழுமையாக அனுபவிக்காத நிலையில், 6ஜி-க்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதாக பிரதமர் மோடி சுதந்திர தின விழா உரையில் கூறியிருப்பது தொழில்நுட்ப உலகினருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால், 6ஜி என்றால் என்ன? இது 5G இலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது மற்றும் எப்போது எதிர்பார்க்கலாம்? என்பது பற்றி தகவல்களை பார்க்கலாம்.
6ஜி என்றால் என்ன?
6G தொழில்நுட்பம் என்பது ஆறாவது தலைமுறை செல்லுலார் தொழில்நுட்பமாகும். இது மைக்ரோ செகண்ட் வேகத்தில் பல்வேறு இணைப்புகளை வழங்கிவிடும். 6G நெட்வொர்க் 4G மற்றும் 5Gஜியின் நீட்சி தான். மைக்ரோ செகண்ட் வேகத்தில் அனைத்து காரியங்களையும் முடித்துவிடும். Builtin.com-ன்படி, 2G எப்படி நமக்கு குறுஞ்செய்தி அனுப்பியதை கொடுத்தோ, 4G ஒரு முழு மொபைல் ஆப் அமைப்பை அறிமுகப்படுத்தியதோ அதைப்போல் 6G ஆனது மெஷினிலிருந்து மெஷின் தகவல்தொடர்புகளை மேம்படுத்தும். இது ஒரு 'ஸ்மார்ட்,' இன்டர்நெட்-ஆஃப்-ல் அதிக இயங்குநிலையை உருவாக்கும். 6G ஆனது நிலத்திலும் வானத்திலும் எண்ணற்ற இயந்திரங்கள் மற்றும் கேஜெட்களை ஒன்றாக இணைக்கும். 6G-ன் வருகை, நிபுணர்களின் கூற்றுப்படி, இயற்பியல் உலகில் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை படைக்கப்போகும் என யூகிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | 8 ஜிபி ரேம், 128 ஜிபி சேமிப்பகத்துடன் மோட்டோரோலாவின் புதிய போன் - ரூ.8,999
5ஜிக்கும் 6ஜிக்கும் என்ன வித்தியாசம்?
6G தொழில்நுட்பமானது தற்போதுள்ள 5G உள்கட்டமைப்பை அனைத்து வகையிலும் மிஞ்சும் வகையில் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேகத்தைப் பொறுத்தவரை, 6G ஒரு மைக்ரோ வினாடியில் ஒரு டெராபைட் (1,000 ஜிகாபைட்) தரவை வழங்கும். அதே நேரத்தில் 5G ஒரு மில்லி விநாடியில் (1,000 மைக்ரோ விநாடிகள்) 20 ஜிகாபைட்களை வழங்கும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் நம்புகிறார்கள். 6G முதன்மையாக இயந்திரத்திலிருந்து இயந்திரத் தொடர்புக்கு உதவும்.
6ஜியை எப்போது எதிர்பார்க்கலாம்?
தற்போதைய நிலவரப்படி, உலகில் எங்கும் இதுபோன்ற தொழில்நுட்பத்தை வெளியிடுவதற்கான நிலையான தேதி எதுவும் இல்லை. இருப்பினும், சில வல்லுநர்கள் மற்றும் தொழில்நுட்ப நிர்வாகிகள் 2030-க்குள் 6G உண்மையாகிவிடும் என்று நம்புகிறார்கள். இன்டெல்லின் நெட்வொர்க் மற்றும் எட்ஜ் குழுமத்தின் மூத்த துணைத் தலைவர் நிக் மெக்கௌன் CNBCயிடம் பேசும்போது, 6G ஆனது 2030-ல் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். இன்னும் சிலர் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் 2032 ஒலிம்பிக்கில் 6G வெளியிடப்படும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.
6ஜிக்கான பணிகள் உலகம் முழுவதும் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. இந்தியாவும், நாட்டில் 6ஜி தொழில்நுட்பத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், பிரதமர் மோடி ‘பாரத் 6ஜி விஷன்’ ஆவணத்தை அறிமுகப்படுத்தினார் மற்றும் தொலைத்தொடர்புத் துறை பாரத் 6ஜி அலையன்ஸ் என்ற பணிக்குழுவை நிறுவியது. இந்தியாவும் 6G தொழில்நுட்பத்திற்கான திட்டங்களை வகுத்துள்ளது. இது இரண்டு கட்டங்களில் செய்யப்படும் என்று அறிக்கைகள் கூறுகின்றன: முதலாவது 2023 முதல் 2025 வரை இருக்கும். இதன் போது யோசனைகள் மற்றும் கருத்துச் சான்று சோதனைகளுக்கு ஆதரவு வழங்கப்படும். 2025 முதல் 2030 வரையிலான இரண்டாவது கட்டத்தில் இந்த யோசனைகள் சோதிக்கப்பட்டு, இறுதியில் வணிகமயமாக்கலுக்கு வழிவகுக்கும்.
இந்தியாவில் 5G நிலை என்ன?
ஜூலை 2022-ல் இந்தியாவின் 5G ஸ்பெக்ட்ரம் ஏலம் நடத்தப்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு 6Gக்கு மாறுவதற்கான பேச்சு வந்துள்ளது. அந்த நேரத்தில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ அதிகபட்சமாக ரூ. 88,078 கோடிக்கு ஏலம் எடுத்தது, அதைத் தொடர்ந்து ஏர்டெல் ரூ. 43,084 கோடிக்கு ஏலம் எடுத்திருக்கிறது. 4G வேகத்தை விட 5ஜி வேகம் 19.2 மடங்கு வேகமாக இருக்கிறது.
மேலும் படிக்க | யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் விலையை திடீரென குறைத்த Samsung Galaxy M14 5G
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ