வெறும் 8 ஆயிரம் முன்பணம் செலுத்தி புது Hero Splendor Plus-ஐ எடுத்துச் செல்லுங்கள்

ஒரே தவணையில் கொடுப்பதற்கு உங்களிடம் போதிய பணம் இல்லை என்றால், கவலை வேண்டாம்.. ஒரு சிறியத் தொகையை முன்பணமாக செலுத்தி இந்த Hero Splendor Plus பைக்கை வீட்டிற்கு எடுத்து செல்லலாம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 29, 2021, 07:46 PM IST
வெறும் 8 ஆயிரம் முன்பணம் செலுத்தி புது Hero Splendor Plus-ஐ எடுத்துச் செல்லுங்கள் title=

இரு சக்கர வாகனத்தின் (Two Wheeler) மோட்டார் சைக்கிள் பிரிவில் நீண்ட மைலேஜ் கொண்ட பைக்குகளில் சில பைக்குகள் அதன் மாடல், ஸ்டைலிஷ் பாணிக்காகவும் விரும்பப்படுகின்றன. அதில் ஒன்று தான் 100 சிசி செக்மென்ட்டில் வலுவான இடத்தை பிடித்துள்ள ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் (Hero Splendor Plus) வாகனம். இன்று நாம் அதைப்பற்றி பார்ப்போம்

நீங்கள் இந்த பைக்கை வாங்க விரும்பினால், இதற்காக நீங்கள் ரூ.64,850 முதல் ரூ.70,710 வரை செலவழிக்க வேண்டும். ஆனால் இவ்வளவு பெரிய தொகையை ஒரே தவணையில் கொடுப்பதற்கு உங்களிடம் போதிய பணம் இல்லை என்றால், கவலை வேண்டாம்.. ஒரு சிறியத் தொகையை முன்பணமாக செலுத்தி இந்த பைக்கை வீட்டிற்கு எடுத்து செல்லலாம். வாருங்கள் அதன் முழு விவரங்களையும் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

இரு சக்கர வாகனத்துறை தகவல் இணையதளமான BIKDEKHO இல் கொடுக்கப்பட்டுள்ள முன்பணம் மற்றும் EMI கால்குலேட்டரின் படி, இந்த பைக் வாங்கினால், அந்த நிறுவனத்துடன் தொடர்புடைய வங்கி இந்த பைக்கிற்கு ரூ.72,825 வரை கடனாக வழங்கும்.

ஒவ்வொரு மாதம் செலுத்த வேண்டிய இஎம்ஐ:

இந்த பைக் லோன் மூலம் வாங்க விரும்பினால், குறைந்தபட்ச முன்பணமாக ரூ.8,092 செலுத்த வேண்டும். மேலும் ஒவ்வொரு மாதமும் ரூ.2,615 இஎம்ஐ (EMI) செலுத்த வேண்டும்.

ALSO READ |  Best Bikes: மிகச்சிறந்த மைலேஜ் அளிக்கும் இந்தியாவின் டாப் பைக்குகள்

ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கின் அம்சங்கள்:

இப்பொழுது Hero Splendor Plus- பைக் வாங்க முன்பணம் எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதை அறிந்து கொண்டீர்கள். இப்போது இந்த பைக்கின் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் பற்றி அறிவோம். 

Hero Splendor Plus ஐந்து வகைகளில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 97.2 CC சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் எரிபொருள் உட்செலுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த எஞ்சின் 8.02 பிஎஸ் பவரையும், 8.05 என்எம் பீக் டார்க்கையும் உருவாக்குகிறது. இது 4-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ALSO READ |  Greta: அட்டகாசமான அம்சங்களுடன் அசத்தல் விலையில் மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்

பைக்கின் மைலேஜ்:

பைக்கின் பிரேக்கிங் அமைப்பில், நிறுவனம் அதன் முன் மற்றும் பின் சக்கரங்களில் டிரம் பிரேக்குகளின் கலவையை வழங்கியுள்ளது. இதனுடன் டியூப்லெஸ் டயர் சேர்க்கப்பட்டுள்ளது. பைக்கின் மைலேஜ் குறித்து, நிறுவனம் லிட்டருக்கு 80.6 கிலோமீட்டர் மைலேஜ் தருவதாகவும், இந்த மைலேஜ் ARAI ஆல் சான்றளிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

முக்கிய குறிப்பு:

இந்த Hero Splendor இல் கிடைக்கும் கடன், முன்பணம் மற்றும் வட்டி விகிதங்கள் உங்கள் வங்கி மற்றும் CIBIL ஸ்கோரைப் பொறுத்தது. உங்கள் வங்கி மற்றும் CIBIL மதிப்பெண்கள் எதிர்மறையாக இருந்தால், வங்கி அதற்கேற்ப கடன் தொகை, முன்பணம் மற்றும் வட்டி விகிதங்களில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

ALSO READ |  வெறும் 22 ஆயிரத்துக்கு 82 kmpl வரை மைலேஜ் கொடுக்கும் பைக் வாங்குங்கள் -முழு விவரம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News