Hyundai; SUV விற்பனையில் கோலோச்சும் ஹூண்டாய்..! இந்த ஆண்டுக்கும் ப்ளான் ரெடி..!

எஸ்.யூ.வி செக்மெண்ட் விற்பனையில் கடந்த 2 ஆண்டுகளாக கோலோச்சும் ஹூண்டாய் நிறுவனம், 2022 -லிலும் கொடிக்கட்டி பறக்க ஆயத்தமாகியுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 2, 2022, 08:08 PM IST
Hyundai; SUV விற்பனையில் கோலோச்சும் ஹூண்டாய்..! இந்த ஆண்டுக்கும் ப்ளான் ரெடி..! title=

2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு வருடங்களாக ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி வாகனப் பிரிவில் (SUV) நாட்டில் முன்னணியில் ஹூண்டாய் உள்ளது. மேலும் இந்த ஆண்டும் இந்த பிரிவில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என முடிவெடுத்துள்ள ஹூண்டாய், 2020 -ல் 1.8 லட்சம் SUV -களை விற்பனை செய்தது. 2021 -ல் 2.52 லட்சம் யூனிட்களை விற்றுத் தீர்த்தது

ALSO READ | இன்டர்நெட் இல்லாமல் Google Map பயன்படுத்துவது எப்படி?

இந்தியாவில் வளர்ந்து வரும் எஸ்.யூ.மார்க்கெட்டானது, 2020 ஆம் ஆண்டில் புதிய உச்சத்தை எட்டியது. ஒட்டுமொத்த கார்களின் விற்பனையில் சுமார் 29 சதவீதம் எஸ்.யூ.வி கார்கள் விற்பனையானது. இது 2021 இல் 37 சதவீதமாக உயர்ந்தது. ஹூண்டாய் நிறுவனத்தின் இந்திய இயக்குநர் தருண் கார்க் பேசும்போது, "கடந்த ஐந்து ஆண்டுகளில் நிறுவனம் 8.34 லட்சம் SUV களை விற்பனை செய்துள்ளது. SUV இடத்தைப் பொறுத்த வரை நாங்கள் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று விரும்புகிறோம். எங்களிடம் முழுமையான டார்க்கெட் உள்ளது, இது எங்களை ஒரு சாதகமான நிலையில் வைக்க உதவுகிறது" எனத் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், SUV பிரிவுகளில் கார்களின் விற்பனையில் வரும் இடைவிடாத வளர்ச்சி கடந்த 2 ஆண்டுகளாக தொடரந்து கொண்டே இருப்பதாக கூறினார். கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, நிறுவனத்தின் சேவைகள் மற்றும் நடைமுறை சிம்பிளாக இருப்பதுவும் ஒரு காரணம் எனத் தெரிவித்தார். மேலும், எஸ்யூவிகள் பாதுகாப்பானவை என்ற கருத்தும் மக்களிடம் உள்ளதாக அருண் கார்க் கூறினார்.

ALSO READ | முந்துங்கள்; iPhone 12 Pro இல் இதுவரை இல்லாத அளவிற்கு சிறப்பு தள்ளுபடி

இந்தியாவில் எஸ்.யூ.வி -மாடல் கார்களுக்கான டிமாண்ட் திடீரென அதிகரித்திருப்பதை நிறுவனமும் கவனத்தில் கொண்டுள்ளதாக கூறிய அவர், டிமாண்ட்டுக்கு ஏற்ப சப்ளையில் தாமதம் ஏற்பட்டதை இந்த புத்தாண்டில் நிவர்த்தி செய்ய அனைத்து முயற்சிகளையும் எடுப்போம் என தெரிவித்துள்ளார். உற்பத்தியை அதிகரிக்கும் பணிகளையும் ஹூண்டாய் முடுக்கிவிட்டுள்ளதாக தெரிவித்தார். 

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News