தற்போது இந்தியாவின் பல பகுதிகளில் கடும் வெப்பத்தை மக்கள் தாங்க வேண்டியுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் வீடுகளில் ஏசி, கூலர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், ஏர் கூலருடன் ஒப்பிடும்போது ஏசி-க்கு செலவு அதிகம். ஏனெனில் அது அதிக மின்சாரத்தை உறிஞ்சுகிறது. பெரும்பாலானோர் தங்கள் வீடுகளில் இரவு முழுவதும் ஏசியை ஆன் செய்தவாறே தூங்குகின்றனர். இதனால் மின்சார கட்டணம் அதிகமாக வரும். இருப்பினும், ஏசி விடிய விடிய ஓடினாலும் மின் கட்டணம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
1. ஏசியை ஒருபோதும் குறைந்த வெப்பநிலையில் வைக்கக்கூடாது. ஏசியை 16 அல்லது 18 டிகிரியில் வைத்திருப்பது நல்ல குளிர்ச்சியை தருவதாக மக்கள் கருதுகின்றனர். ஆனால், பீரோ ஆஃப் எனர்ஜி எஃபிஷியன்சி (BEE) படி, மனித உடலுக்கு உகந்த வெப்பநிலை 24 டிகிரி. அதனால் வெப்பநிலையை 24 ஆக வைத்திருங்கள், இது நிறைய மின்சாரத்தை சேமிக்கும். மேலும் ஏசியில் ஒவ்வொரு டிகிரி வெப்பநிலையை அதிகரிக்கும் போதும், 6 சதவீதம் மின்சாரத்தை சேமிக்க முடியும் என பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க | ஏசியால் கரண்ட் பில் ஷாக் அடிக்காமல் இருக்க சில டிப்ஸ்!
2. சம்மருக்கு முந்தைய குளிர் காலத்தில் நீங்கள் ஏசியை உபயோகிக்காமல் விட்டுவிட்டு, பிறகு சர்வீஸ் செய்யாமல் பயன்படுத்தினால், அதனால் மின் கட்டணம் அதிகமாக வரலாம். ஏனெனில், நீண்ட நேரம் ஏசி நிறுத்தப்படுவதால், அதில் தூசி மற்றும் துகள்கள் அடைத்திருக்கும். அத்தகைய சூழ்நிலையில், குளிர்ச்சியை தர மெஷின் நிறைய வேலை செய்ய வேண்டி வரும். அதனால் மறக்காமல் சர்வீஸ் செய்யுங்கள்.
3. ஏசியை ஆன் செய்யும் முன் அந்த அறையின் கதவு மற்றும் ஜன்னலை மூடவும். அதனால் அனல் காற்று உள்ளே வராது, குளிர் காற்று வெளியே போகாது. இல்லையெனில் உங்கள் ஏசி அதிகமாக வேலை செய்ய வேண்டியிருக்கும். மேலும் மின் கட்டணமும் அதிகமாகும்.
4. இப்போதெல்லாம் பெரும்பாலான ஏசிகள் ஸ்லீப் மோட் அம்சத்துடன் வருகின்றன. அவை தானாகவே வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை சரிசெய்துக் கொள்ளும். அதனால் 36 சதவீத மின்சாரத்தை சேமிக்க முடியும்.
5. நீங்கள் AC-யுடன் மின்விசிறியைப் பயன்படுத்தும்போது, அது அறையின் ஒவ்வொரு மூலைக்கும் AC காற்றை கொண்டுச் செல்லும். இதனால் அறை முழுவதும் குளிர்ச்சியாக இருக்கும். இதனுடன், ஏசியின் வெப்பநிலையைக் குறைக்க வேண்டிய தேவையும் ஏற்படாமல், மின்சாரத்தை சேமிக்கலாம்.
மேலும் படிக்க | ஐபிஎல் போட்டியை பார்க்க ஜியோவின் சூப்பரான 2ஜிபி பிளான்..! 3 மாதங்களுக்கு ஜாலி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ