எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்து பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். இதனை வருவாய் தளமாக மாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கும் அவர், டிவிட்டர் மூலம் கிடைக்கும் வருவாயை கிரியேட்டர்களுடன் பகிர்ந்து கொள்ளும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார். இப்போது அந்த நடைமுறை செயல்பாட்டுக்கு வந்துள்ளது. குறிப்பிட்ட சில டிவிட்டர் யூசர்கள் மானிடைசேஷன் செய்து வருவாய் பகிர்ந்து கொள்வதற்கான நோடிபிகேஷனை அனுப்பியுள்ளது. அதுவும் சந்தா செலுத்தி ப்ளூ டிக் பெற்றவர்கள் மட்டுமே டிவிட்டர் மானிடைசேஷன் செய்ய தகுதியானர்கள். இது குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்வோம்.
ட்விட்டர் வருவாய் என்றால் என்ன?
ட்விட்டர் விளம்பர வருவாய் பகிர்வு என்பது டிவிட்டர் தளத்தின் லேட்டஸ்ட் அம்சம். இது கிரியேட்டர்கள் தங்கள் ட்வீட்களின் கீழ் தோன்றும் ஸ்பான்சர் விளம்பர பதிவுகளிலிருந்து கிடைக்கும் ட்விட்டரின் வருவாயில் ஒரு பங்கை யூசர்களுக்கு கொடுக்கும். சிம்பிளாக சொல்வது என்றால் யூடியூப் மாதிரி தான். இந்த முன்முயற்சியின் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பாளிகள் தங்கள் பதிவுகளின் கீழ் உள்ள கருத்துகளில் காட்டப்படும் விளம்பரங்களால் பெறப்படும் பணத்தின் ஒரு பகுதியைப் பெறலாம். ஆனால், எவ்வளவு பணம், எப்படி கொடுக்கும் என்ற தகவல் இல்லை.
மேலும் படிக்க | Amazon Prime Day Sale: பல வித பொருட்களில் பக்காவான தள்ளுபடி.. ஜூலை 15..ரெடியா இருங்க
டிவிட்டர் வருவாய் தகுதிகள் என்ன?
டிவிட்டர் வருவாயை பெறுவதற்கு டிவிட்டர் வருவாய் செயல் திட்டம் இருக்கும் நாட்டில் நீங்கள் குடியிருக்க வேண்டும். உங்களுடைய வயது 18-க்கு மேல் இருப்பது அவசியம். ப்ளூ டிக் பெற்றிருப்பதுடன் கடந்த மூன்று மாதங்களில் உங்கள் டிவிட்கள் குறைந்தது 5 மில்லியன் இம்ப்ரசன்ஸ்களைப் பெற்றிருக்க வேண்டும். மேலும், உங்கள் டிவிட்டர் கணக்கு குறைந்தது மூன்று மாதங்கள் செயலில் இருந்திருக்க வேண்டும். கூடுதலாக முந்தைய 30 நாட்களில் 25 டிவிட்டர் பதிவுகளும், குறைந்தது 500 பின் தொடர்பவர்களும் இருக்க வேண்டும்.
உங்களுடைய புரொபைலில் புகைப்படம் மற்றும் பயோ உள்ளிட்ட எல்லா தகவல்களும் இருப்பது அவசியம். போலி கணக்கு என கண்டறியப்பட்டால், நீங்கள் டிவிட்டரின் விளம்பரதார திட்டத்தில் இருந்து நீக்கப்படுவீர்கள். ஸ்ட்ரைப் கணக்கு வழியாகவே உங்களின் வருவாய் செலுத்தப்படும். அதற்கு நீங்கள் ஸ்ட்ரைப் அக்கவுண்ட் தொடங்க வேண்டும்.
எந்தெந்த வழிகளில் பணம் சம்பாதிக்கலாம்?
தயாரிப்பு மற்றும் சேவையை விளம்பரப்படுத்தும் ஸ்பான்சர் செய்யப்பட்ட ட்வீட்கள், அஃபிலியேட் மார்க்கெட்டிங், டிப்ஸ் கொடுப்பதன் மூலம் பின் தொடர்பாளர்கள் நேரடியாக பணம் கொடுக்கலாம்.
ஸ்ட்ரைப் கணக்கு ஆதரவான நாடுகள்
ட்விட்டர் விளம்பர வருவாய் பகிர்வு திட்டத்திற்கு தகுதி பெற, நீங்கள் ஸ்ட்ரைப் பேஅவுட்களை ஆதரிக்கும் நாட்டில் வசிக்க வேண்டும். ஸ்ட்ரைப் தகுதி பெற்ற நாடுகள் இதோ: இந்தியா, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரேசில், பல்கேரியா, கனடா, குரோஷியா, சைப்ரஸ், செ குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஜிப்ரால்டர், கிரீஸ், ஹாங்காங், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, ஜப்பான், லாட்வியா, மலேசியா, மெக்சிகோ, நெதர்லாந்து, நியூசிலாந்து, நார்வே, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, தாய்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள்.
மேலும் படிக்க | அதிரடி சலுகை! ரூ.20000க்குள் கிடைக்கும் சூப்பரான 5 ஸ்மார்ட்போன்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ