யுபிஐ செயலியில் ஆட்டோமேடிக் பேமெண்ட் செட் செய்வது எப்படி?

யுபிஐ செயலியில் மின்சாரம் முதல் மொபைல் ரீச்சார்ஜ், கிரெடிட் கார்டு வரை அனைத்து பேமெண்டுகளுக்கும் யுபிஐ செயலி மூலம்  ஆட்டோமேடிக் பேமெண்ட் செட் செய்து கொள்ளலாம். 

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 6, 2022, 05:37 PM IST
யுபிஐ செயலியில் ஆட்டோமேடிக் பேமெண்ட் செட் செய்வது எப்படி? title=

இந்தியன் ரிசர்வ் வங்கி ஆட்டோ பேமெண்டுக்கு புதிய விதிமுறைகளை அமல்படுத்தியிருக்கிறது. இந்த புதிய விதிமுறைகள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் பில் செலுத்தும் முறைகளை சற்று கடினமாக்கியுள்ளது. அதேநேரத்தில் நீங்கள் யுபிஐ செயலிகள் மூலம் எளிமையாக ஆட்டோ பேமெண்ட் செட் செய்து கொள்ளலாம். இதன் மூலம் நிலுவையில் இருக்கும் பில் தொகைகளை செலுத்துவதற்கான வழிமுறைகளை யுபிஐ செயலி மேலும் எளிமையாக்கியுள்ளது. 5 ஆயிரம் ரூபாய்க்கு உட்பட்ட பேமெண்டுகளுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. அதற்கு மேற்பட்ட தொகைகளை செலுத்துவதற்கு நீங்கள் ஆர்பிஐ விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். 

மேலும் படிக்க | ஏடிஎம்மில் பணம் எடுக்கப்போறீங்களா, அப்போ உடனே இத படிங்க

யுபிஐ ஆட்டோபே என்றால் என்ன? 

யுபிஐ தானியங்கி கட்டண அம்சம், ஒரு குறிப்பிட்ட தேதியில் செலுத்த வேண்டிய ஒரு நிலையான தொகையை மாதாந்திர கடன்களை ஆட்டோமேடிக்காக செலுத்த அனுமதிக்கிறது. தனிநபர்கள் இந்த சேவையை பில்களை செலுத்தவும், சந்தாக்களைப் பெறவும், பயன்பாட்டு சேவைகளை அணுகவும் பயன்படுத்தலாம்.

நன்மைகள்

* யுபிஐ கணக்கிலிருந்து கடன்களை ஆட்டோமேடிக்காக செலுத்துவதற்கு செயலிகளில் அப்டேட் செய்யலாம்.

* வாடிக்கையாளர்கள் ரூ .1 முதல் ரூ .5000 வரையிலான தொடர்ச்சியான கடன்களை செலுத்திக் கொள்ளலாம்

* இந்த செட்டிங்ஸை ஆக்டிவேட் செய்ய எந்த ஆவணமும் தேவையில்லை.

* தேவையான சமயத்தில் நீங்கள் இந்த அம்சத்தை மாற்றிக்கொள்ளவும் வசதி இருக்கிறது. 

மேலும் படிக்க | தமிழ் தொலைக்காட்சி ராஜ்ஜியத்தின் அடுத்த வாரிசு; நவம்பர் முதல் டிவி இல் Blacksheep

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News