ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தையில் அட்டகாசமாய் களமிறங்கவுள்ள ஸ்கூட்டர்கள் இவைதான்

நீங்கள் ஒரு புதிய ஸ்கூட்டர் அல்லது பைக்கை வாங்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், இந்த மாதம் இந்தியாவில் எந்த ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன என்பதை தெரிந்து கொள்வது அவசியமாகும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 6, 2021, 02:12 PM IST
ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தையில் அட்டகாசமாய் களமிறங்கவுள்ள ஸ்கூட்டர்கள் இவைதான் title=

கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் ஊரடங்கு விதிக்கப்பட்ட பிறகு தற்போது நிலை சற்று சீராகி வருகிறது. இதைத் தொடந்து இப்போது ஆட்டோ துறையும் வேகம் பெற்று வருகிறது. 

சமீப காலங்களில், இந்தியாவில் பல வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் சில வாகனங்கள் இந்திய சந்தையில் நுழைய தயாராக உள்ளன. நீங்கள் ஒரு புதிய ஸ்கூட்டர் அல்லது பைக்கை வாங்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், இந்த மாதம் இந்தியாவில் எந்த ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன என்பதை தெரிந்து கொள்வது அவசியமாகும். இந்த பட்டியலைப் இந்த பதிவில் பார்ப்போம்.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்  (Ola Electric Scooter)
ஜூலை மாதத்தில், ஓலா ஸ்கூட்டர் (Ola Electric Scooter) வாகன சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஸ்கூட்டர் ஜூலை மாதம் அறிமுகம் ஆகும் என நம்பப்பட்டது. ஆனால் இப்போது, இந்த மின்சார ஸ்கூட்டர் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகம் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. நிறுவனம் அதை 10 வண்ணங்களில் அறிமுகப்படுத்தும். இந்த ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே மிகவும் பிரபலமாகிவிட்டது. இதன் முன்பதிவு தொடங்கிய முதல் நாளே ஒரு லட்சம் வாடிக்கையாளர்கள் இதை முன்பதிவு செய்தனர். 

சிம்பிள் ஒன்  (Simple One Scooter) 

பெங்களூருவைச் சேர்ந்த எலக்ட்ரிக் டூவீலர் ஸ்டார்ட் அப் சிம்பிள் எனர்ஜி (Simple Energy) நிறுவனம் தனது புதிய ஸ்கூட்டரை ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 103 கிமீ ஆகும். இது வெறும் 3.6 வினாடிகளில் 0 முதல் 50 கிமீ வேகத்தை எட்டும் என்று கூறப்படுகிறது. நிறுவனம் 4.8 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக்கை பயன்படுத்தியுள்ளது. இது 9.4 ஹெச்பி பவரையும் 72 என்எம் டார்க்கையும் உருவாக்குகிறது.

ALSO READ: Ola Electric ஸ்கூட்டருக்கு போட்டியாக ஆகஸ்ட் 15 அறிமுகமாகிறது Simple one ஸ்கூட்டர்

BMW C 400 GT

பிரபல வாகன நிறுவனமான பிஎம்டபிள்யூ (BMW) மோட்டோராட் தனது புதிய மேக்சி-ஸ்கூட்டர் சி 400 ஜிடி யையும் ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யவுள்ளது. இதன் டீசர் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் விலை சுமார் ரூ .5 லட்சம் என்று கூறப்படுகிறது.

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350)

புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 ஆகஸ்ட் மாதத்தில் இந்திய வாகன சந்தையில் அறிமுகமாகும். இது நிறுவனத்தின் புதிய மாடலாக இருக்கும். புதிய எஞ்சின், ஃப்ரேம், தொழில்நுட்பம் மற்றும் பல மேம்பட்ட அம்சங்களை இதில் காணலாம்.

ஹோண்டா ஹார்னெட் 2.0 அடிப்படையிலான ADV  (Honda Hornet 2.0 based ADV) 

ஜப்பானிய நிறுவனமான ஹோண்டா (Honda), ஆகஸ்ட் மாதத்தில் ஹார்னெட் 2.0 அடிப்படையிலான ஏடிவி-ஐ அறிமுகப்படுத்தக்கூடும். இந்த பைக் ஹோண்டாவின் ரெட்விங் டீலர் மூலம் விற்பனை செய்யப்படும். ஹோண்டாவின் இந்த பைக்கின் விலை 1.20 லட்சத்திலிருந்து 1.50 லட்சத்திற்குள் இருக்கக்கூடும் (எக்ஸ்-ஷோரூம்).

ALSO READ: BMW Electric Scooter: மிக விரைவில் இந்தியாவில் அறிமுகம், அசத்தும் அம்சங்கள், விலை இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News