கூகிளுக்கு பிறந்த நாள்: சர்பரைஸ் உங்களுக்கு!

Last Updated : Sep 27, 2017, 12:11 PM IST
கூகிளுக்கு பிறந்த நாள்: சர்பரைஸ் உங்களுக்கு! title=

உலகின் முதன்மையான தேடுதல் எஞ்சினாக செயல்படுகின்ற கூகிள் நிறுவனத்தின் 19-வது பிறந்தநாள் இன்று

அந்த வகையில் நம்மை உற்சாகப்படுத்தும் வகையில், கூகிள் டூடுளில் விதவிதமான விளையாட்டுகளை உருவாக்கியுள்ளது.

கூகிள் இணையதள தேடுதலில் சர்வதேச அளவில் 123 மொழிகளில் 160-க்கும் மேற்பட்ட நாடுகளில் 4.5 பில்லியன் பயனாளர்களை பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று கூகிளுக்கு 19-வது பிறந்தநாளில் கூகிள் டூடுளில் சர்ப்ரைஸ் ஸ்பின்னர் டூடுளை வெளியிட்டுள்ளது. கூகிள் தன்னுடைய பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் தன்னைப் புதுமாதிரியாக வடிவமைத்துள்ளது கூகுள்.

 

கூகிள் 19-வது பிறந்தநாளைக் கொண்டாட, கூகிளை கிளிக் செய்தால், நாமும் அதோடு சேர்ந்து விளையாட்டு, பாட்டு போன்று விதவிதமாக விளையாடி மகிழலாம். இவை அனைத்தும் ஸ்பின்மூலம் தேர்வுசெய்யப்படுகிறது. அதனால் கூகிளை கிளிக் செய்து அனைவரும் விளையாடி மகிழுங்கள்.

Trending News