இந்திய திரைப்படத்துறை தந்தையை போற்றும் கூகிள் Doodle!

இந்திய திரைப்படத்துறையின் தந்தை என போற்றப்படும் தாதா சாகேப் பால்கே அவர்களின் 148-வது பிறந்தநாளினை சிறப்பு டூடுல் மூலம் கொண்டாடுகிறது கூகிள்.

Last Updated : Apr 30, 2018, 08:12 AM IST
இந்திய திரைப்படத்துறை தந்தையை போற்றும் கூகிள் Doodle! title=

இந்திய திரைப்படத்துறையின் தந்தை என போற்றப்படும் தாதா சாகேப் பால்கே அவர்களின் 148-வது பிறந்தநாளினை சிறப்பு டூடுல் மூலம் கொண்டாடுகிறது கூகிள்.

ஏப்ரல் 30, 1870 நாள் நாசிக்கில் பிறந்த இவர் துண்டிராஜ் கோவிந்த் பால்கே என பெயர் சூட்டப்பட்டார். தனது இளைமை காலத்தில் துடிப்புடன் இருந்த இவர் மும்பையில் உள்ள சர் ஜெ.ஜெ கலைக்கல்லூரியில் சேர்ந்து பயின்ற இவர் 1910 முதல் 1940 வரை பல திரைப்படங்களை உருவாக்கினார்.

இந்தியாவின் முதல் சைலன் படமான ராஜா அரிச்சந்திரா திரைப்படத்தினை 1913-ஆம் ஆண்டு தந்தவர் இவரே. தனது 19 ஆண்டுகால சினிமா துறை அனுபவத்தில் இவர் 95 முழுநீளப் படங்களையும், 27 குறும்படங்களையும் உருவாக்கியுள்ளார்.

ஆரம்ப காலத்தில் வெளிவந்த படங்கள் ஏதும் வண்ணப்படங்களாக இல்லை.,  ஒலியும் இல்லாமல் ஊமைப்படங்களாகத்தான் இருந்தன. இந்நிலையில் பால்கே தனது குடும்பத்திலிருந்த மொத்தம் 18 பேர்களையும் நடிகர்களாக மாற்றி தனது திரைப்படத்தினை வெளியிட்டார்.

திரைத்துறையில் இவரது பங்களிப்பினை பாராட்டி பின்னர் இவர் தாதாசாகெப் பால்கே என அனைவராலும் அழைக்கப்படார். இவரது நினைவாக தாதாசாகெப் பால்கே விருது நிறுவப்பட்டு, திரைத் துறையில் சாதனை புரிபவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று அவரது 148-வது பிறந்தநாளினை கொண்டாடும் வகையில் சிறப்பு டூடுலினை வெளியிட்டுள்ளது கூகிள்!

Trending News