விரைவில்., ஹிந்தி உள்பட 30 மொழிகளில் Google Assistant வெளியாக உள்ளது!
கூகிள் நிறுவனத்தின் Google Assistant செயலியானது விரைவில் 30 கூடுதல் மொழிகளுடன் வெளியாகும் என கூகிள் தெரிவித்துள்ளது. இதில் ஹிந்தி மொழியும் உள்ளடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
Google Assistant என்பது கூகிள்-ன் அதிகாரப்பூர்வ பயன்பாடாகும், இது ஸ்மார்ட்போன்கள் 'முகப்புப்பக்கத்தில் உள்ள பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் அல்லது மைக்ரோஃபோனில்' OK Google' என்று கூறி, பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்ஃபோன்களை மெய்நிகர் உதவியாளராக மாற்ற அனுமதிக்கின்றது.
தற்போது Google Assistant ஆனது ஹிந்தி மொழியின் ஒருசில வார்த்தைகளை புரிந்துக்கொள்கிறது. குறிப்பாக "பிஹார் கி ராஜ்தானி" மற்றும் "கிச்சடிக்கி ரெஸிப்பி" போன்றவை ஆகும்.
தற்போது வரை Google Assistant 8 மொழிகளில் (ஆங்கிலம், ப்ரஞ்ச், ஜெர்மன், இட்டாலி, ஜப்பானிஸ், கொரியன், ஸ்பேனிஸ், போர்ட்கீஸ்) பயனர்களின் கட்டளைகளை புரிந்துக்கொள்கிறது.
இந்நிலையில் இந்த ஆண்டின் இறுதிக்குள் 30 கூடுதல் மொழிகளில் பயனர் கட்டலளைகளை புரிந்துக்கொள்ளும் அளவிற்கு Google Assistant மேம்படுத்தப்படவுள்ளது என கூகிள் நிறுவன துணை தலைவர் தெரிவித்துள்ளார்!