இந்திய மாணவரின் ஓவியத்தை கொண்டாடும் கூகுள் - இன்று டூடுல் வெளியீடு

Doodle4Google: டூடுல் போட்டியில் சிறந்த டூடுலாக கொல்கத்தாவைச் சேர்ந்த ஷ்லோக் முகர்ஜியின் ஓவியத்தை தேர்வு செய்த கூகுள், அதை இன்று டூடுலாக வெளியிட்டுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Nov 14, 2022, 10:50 AM IST
  • டூடுல் போட்டி இந்தியா முழுவதும் நடத்தப்பட்டது.
  • 'அடுத்த 25 ஆண்டுகளில், எனது இந்தியா...' என்ற தலைப்பின்கீழ் போட்டி நடத்தப்பட்டது.
  • மொத்தம் 1,15,000 மாணவர்கள் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
இந்திய மாணவரின் ஓவியத்தை கொண்டாடும் கூகுள் - இன்று டூடுல் வெளியீடு  title=

Doodle4Google: கூகுள் நிறுவனம் நடத்திய 2022ஆம் ஆண்டுக்கான டூடுல் போட்டியில் வெற்றி பெற்றவர்களை அந்நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. மேலும், இதைச் சிறப்பிக்கும் வகையில், டூடுல் ஒன்றையும் கூகுள் வெளியிட்டுளளது. 

இந்த ஆண்டு கொல்கத்தாவைச் சேர்ந்த ஷ்லோக் முகர்ஜி என்ற மாணவர் இதில் வெற்றிபெற்றுள்ளார். இந்தியாவின் அறிவியல் வளர்ச்சியை முன்னிலைப்படுத்த வேண்டும் என கருவில் முகர்ஜி வரைந்த ஓவியம் வெற்றி பெற்றதை அடுத்து, அந்த ஓவியத்தையே தற்போது கூகுள் டூடுலாக வெளியிட்டுள்ளது. 

இந்திய முழுவதும் 100 நகரங்களில் இருந்து 1 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தாண்டு டூடுல் போட்டி நடத்தப்பட்டது. இதில், மொத்தம் 1,15,000 பேர் பங்கேற்றனர். "அடுத்த 25 ஆண்டுகளில், எனது இந்தியா..." என்ற தலைப்பின்கீழ் இப்போட்டி நடத்தப்பட்டது. 

மேலும் படிக்க | நாய் குட்டிகளுக்கு அரேஞ் மேரேஞ் : இந்து முறைப்படி திருமணம் - பிள்ளையில்லா தம்பதி மகிழ்ச்சி!

இதுகுறித்து கூகுள்,"மாணவர்களின் படைப்புத்திறன் மற்றும் கற்பனைத்திறனை கண்டு வியக்கிறோம். ஒட்டுமொத்த வளர்ச்சியின் தொழில்நுட்ப வளர்ச்சியின் பங்கு குறித்த டூடுல் மிகவும் மனதை கவர்ந்தது" என தெரிவித்துள்ளது. மேலும், இந்தாண்டு,"அனைத்திற்கும் மத்தியில் இந்தியா" என்று ஷ்லோக் வரைந்த டூடுல்தான் இந்திய அளவில் இந்தாண்டின் சிறந்த டூடுலாக தேர்வுசெய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

அந்த டூடுல் உடன் அவர்,'அடுத்த 25 ஆண்டுகளில், மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்காக என் இந்தியா விஞ்ஞானிகள் தற்சார்பாக, சுழலலியலுக்கு ஏதுவான ரோபோவை உருவாக்க வேண்டும். பூமியில் இருந்து விண்வெளிக்கு இந்தியா வழக்கமான இண்டர்கலெக்டிக் பயணங்களைக் கொண்டிருக்கும். யோகா மற்றும் ஆயுர்வேதத் துறையில் இந்தியா மேலும் வளர்ச்சி அடையும், மேலும் வரும் ஆண்டுகளில் இந்தியா வலிமை பெறும்' என குறிப்பிட்டுள்ளார். 

கூகுள் டூடுல் போட்டி நடுவர் குழுவில் இந்த ஆண்டு நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் நீனா குப்தா; டிங்கிள் காமிக்ஸில் தலைமை ஆசிரியர், குரியகோஸ் வைசியன்; தொழில்முனைவோர் அலிகா பட் மற்றும் கூகுள் டூடுல் குழு ஆகியோர் நடுவர்களாக அமைந்தனர். இருவரும் சேர்ந்து, நாடு முழுவதும் இருந்து இறுதியாக 20 போட்டியாளர்களைத் தேர்ந்தெடுத்து, கலைத் தகுதி, படைப்பாற்றல், அணுகுமுறையின் தனித்துவம் மற்றும் புதுமை ஆகியவற்றின் அளவுகோல்களை மதிப்பீடு செய்துள்ளனர்.

தேர்வான 20 இறுதி டூடுல்கள் பொது வாக்களிப்பதற்காக ஆன்லைனில் காட்சிப்படுத்தப்பட்டன. ஷ்லோக் முகர்ஜி தவிர, குழு வெற்றியாளர்களாக நான்கு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூகுள் போட்டிக்கான டூடுல் இளைஞர்களிடையே படைப்பாற்றலை ஊக்குவிப்பதையும், கற்பனைத்திறனைக் கொண்டாடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க | கூகுள் கொடுக்கும் ரூ.25 லட்சம் பரிசு! நீங்களும் வெல்லலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News