Gmail Alert : websites & APPஇல் இருந்து உடனடியாக வெளியேறவும்

  ஜிமெயில் தனது பயனர்களுக்கு ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. உங்கள் மின்னஞ்சலில் மோசடி ஏதும் செய்யப்படாமல் தவிர்ப்பதைப் பற்றி ஜிமெயில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 12, 2021, 12:42 PM IST
  • மின்னஞ்சலில் மோசடி ஏதும் செய்யப்படாமல் தவிர்ப்பதைப் பற்றி ஜிமெயில் எச்சரிக்கை
  • websites & APPஇல் இருந்து உடனடியாக வெளியேறவும்
  • மின்னஞ்சலில் மோசடி ஏதும் செய்யப்படாமல் தவிர்ப்பதைப் பற்றி ஜிமெயில் எச்சரிக்கை
Gmail Alert : websites & APPஇல் இருந்து உடனடியாக வெளியேறவும் title=

Gmail Alert!:  ஜிமெயில் தனது பயனர்களுக்கு ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. உங்கள் மின்னஞ்சலில் மோசடி ஏதும் செய்யப்படாமல் தவிர்ப்பதைப் பற்றி ஜிமெயில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நீங்கள் ஒரு புதிய இணையதளத்தில் Gmail இல் பல முறை உள்நுழைந்து பயன்படுத்திய பிறகு, அதை மறந்துவிடுவது இயல்பானது என்று Gmail கூறுகிறது. அத்தகைய சூழ்நிலையில், இரண்டு தெரிவுகள் உங்கள் முன் இருக்கிறது.

வழக்கமாக ஜிமெயில் மூலம் வலைத்தளத்திற்குள் செல்கிறோம். அத்தகைய சூழ்நிலையில், எந்தவொரு காரணமும் இல்லாமல் இணையதளத்தில் உள்நுழைந்த ஐடியை நீக்க வேண்டும் என்று ஜிமெயில் அறிவுறுத்துகிறது.

Also Read | முன்களப் பணியாற்றும் செவிலியர்களுக்கு International Nurses Day வாழ்த்துக்கள்

ஒரு வலைத்தளத்திற்குள் உள்நுழையும்போது உங்கள் ஜிமெயில் அதனுடன் இணைக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், கீழ் காணும் வழிமுறையைப் பின்பற்றுவதன் மூலம் பிற வலைத்தளங்கள் மற்றும் செயலிகளில் இருந்து உங்கள் ஜிமெயிலை நீக்கலாம்.

உங்கள் ஜிமெயிலுடன் பல வலைத்தளங்கள் இணைந்துள்ளன. அவை உங்களுக்கு மறந்துவிடும். அந்த சூழ்நிலையில், உங்கள் மொபைலின் ஜிமெயில் செயலியில் அல்லாமல், Google Crome இல் Gmail மூலம் உள்நுழையவும்.   

உங்கள் ஜிமெயில் கணக்கு எத்தனை வலைத்தளங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

அதற்கு மற்றொரு பக்கத்தைத் திறக்க வேண்டும், அதில் ஸ்க்ரோலிங் செய்து கீழே சென்றால்,View Gmail in என்ற தெரிவு இருக்கும் (மொபைல் / பழைய பதிப்பு / டெக்ஸ்டாப்). இதற்குப் பிறகு, இப்போது நீங்கள் டெக்ஸ்டாப்பைக் கிளிக் செய்ய வேண்டும்,

Also Read | WhatsApp Privacy Policy: மே 15-க்கு பிறகு WhatsApp இயங்காது என்பது உண்மையா

அதன் பிறகு டெஸ்க்டாப்பில் ஜிமெயில் போலவே எல்லா மின்னஞ்சல்களையும் பார்க்கலாம். இந்தப் பக்கத்தில் கீழே ஸ்க்ரோல் செய்து செல்லவும்.

இதன் பிறகு உங்கள் ஜிமெயில் பற்றிய முழுமையான தகவல்கள் கிடைக்கும். இதற்குப் பிறகு நீங்கள் ஜிமெயில் கணக்கு இணைப்பிற்குச் சென்று விவரங்களைக் கிளிக் செய்ய வேண்டும். 
பாதுகாப்பு சரிபார்ப்பைப் பார்க்கும்போது, சேமிக்கப்பட்ட ஜிமெயில் கடவுச்சொல்லைக் கிளிக் செய்தால் உங்கள் கணக்கு எத்தனை வலைத்தளங்கள் மற்றும் செயலிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதைக் காண்பிக்கும். 

இப்போது இந்த தனியுரிமையை மாற்ற, நீங்கள் கடவுச்சொல் சரிபார்ப்பு என்ற தெரிவை கிளிக் செய்யவும். அதன் பிறகு ஜிமெயில் ஐடியின் கடவுச்சொல்லை இங்கே உள்ளிட வேண்டும். இதன் பிறகு நீங்கள் ஒவ்வொரு செயலி மற்றும் வலைத்தளத்திலிருந்தும் வெளியேறுவீர்கள். அங்குள்ள பக்க பேனலைக் (side panel) கிளிக் செய்வதன் மூலமும் தேவையில்லாத வலைதளங்கள் மற்றும் செயலிகளில் இருந்து வெளியேறலாம்.

Also Read | Hilarious! தடுப்பூசி ஃபார்முலா தொடர்பான கெஜ்ரிவாலின் யோசனை இணையத்தில் வைரல்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News