விநாயக சதுர்த்தி சலுகை: 32 இன்ச் ஸ்மார்ட் டிவி வெறும் 2800 ரூபாய்க்கு விற்பனை

விநாயக சதுர்த்தியையொட்டி 32 இன்ச் ஸ்மார்ட் டிவி வெறும் 2800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 29, 2022, 01:37 PM IST
  • ஸ்மார்ட் டிவிக்களுக்கு மிகப்பெரிய ஆஃபர்
  • பிளிப்கார்ட்டில் விநாயகர் சதூர்த்தி சலுகை
  • அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க
விநாயக சதுர்த்தி சலுகை: 32 இன்ச் ஸ்மார்ட் டிவி வெறும் 2800 ரூபாய்க்கு விற்பனை title=

விநாயக சதுர்த்தி 2022: விநாயக சதுர்த்தி ஆகஸ்ட் 31 அன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ஆன்லைன் தளங்களில் ஸ்மார்ட் டிவிகளில் பெரிய தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விலையுயர்ந்த தொலைக்காட்சிகளை அந்த ஆஃபரில் மிகவும் மலிவாக வாங்கலாம். ஏசரின் ஐ-சீரிஸின் ஸ்மார்ட் டிவிக்கும் பெரும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதனால், நீண்ட நாட்களாக விலை குறைவாக ஸ்மார்ட் டிவியை வாங்க வேண்டும் என நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் இது சரியான சந்தர்ப்பம் ஆகும். ஏசரின் 32 இன்ச் ஸ்மார்ட் டிவியை வெறும் 2800 ரூபாய்க்கு வாங்குவது எப்படி? என இங்கே தெரிந்து கொள்ளலாம். 

ஏசர் I சீரிஸ் 32 இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியின் அறிமுக விலை ரூ.19,990. ஆனால் பிளிப்கார்ட்டில் ரூ.13,999-க்கு கிடைக்கிறது. அதாவது 29% தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதைத் தொடர்ந்து வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் மூலம் டிவியின் விலையை கணிசமாகக் குறைக்க முடியும்.

மேலும் படிக்க | ஆன்லைன் மூலம் பணத்தை சுருட்டும் நிறுவனம்; அதிர்ச்சி அளிக்கும் ரிப்போர்ட்

ஏசர் ஆண்ட்ராய்டு டிவி ஆஃபர்

ஏசர் I சீரிஸ் 32 இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியை வாங்க எஸ்பிஐ டெபிட் கார்டைப் பயன்படுத்தினால், ரூ.250 தள்ளுபடி கிடைக்கும். அதன் பிறகு டிவியின் விலை ரூ.13,749 ஆக குறையும். அதன் பிறகு ஒரு எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் உண்டு, இதன் காரணமாக டிவியின் விலை மேலும் கணிசமாகக் குறையும்.

ஏசர் டிவி எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்

ஏசர் ஐ சீரிஸ் 32 இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியில் ரூ.11 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் சலுகை உள்ளது. உங்கள் பழைய டிவியை மாற்றிக் கொண்டால், இந்த பலனை நீங்கள் முழுமையாக பெற முடியும். ஆனால் உங்கள் பழைய டிவியின் நிலை நன்றாகவும், லேட்டஸ்ட் மாதிரியும் இருந்தால் மட்டுமே 11 ஆயிரம் ஆஃபர் முழுமையாக கிடைக்கும். இந்த ஆஃபர் முழுமையாக உங்களுக்கு கிடைத்தால் டிவியை வெறும் ரூ.2,749-க்கு வாங்கிச் செல்லாம். அதாவது சுமார் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள டிவி வெறும் 2800 ரூபாயில் உங்களுடையதாக மாற்றிவிட முடியும்.

மேலும் படிக்க | அமேசான் - பிளிப்கார்ட்டை விட குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்யும் இணையதளம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News