BMW iX SUV முதல் எலக்ட்ரிக் காரின் விலை இந்தியாவில் 1.15 கோடி ரூபாய்! விவரம் இங்கே...

BMW இன் முதல் எலக்ட்ரிக் கார் BMW iX SUV இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது, இதன் விலை  1.15 கோடி ரூபாயாம்! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 13, 2021, 03:33 PM IST
  • BMWவின் முதல் எலக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகமானது
  • குறைந்தபட்ச விலை 1.15 கோடி ரூபாய்!
  • BMW எலக்ட்ரிக் கார் 5 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது
BMW iX SUV முதல் எலக்ட்ரிக் காரின் விலை இந்தியாவில் 1.15 கோடி ரூபாய்! விவரம் இங்கே... title=

BMW launches new BMW iX in India: BMW iX மின்சார SUV (BMW iX e-SUV) இந்தியாவில் டிசம்பர் 13 திங்கட்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. யூரோ என்சிஏபி கிராஷ் டெஸ்டில் புதிய எஸ்யூவி அனைத்து சோதனைப் பிரிவுகளிலும் 5 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய BMW காருக்காக இந்திய மக்கள் ஆவலுடன் காத்திருந்தனர். 

ஜெர்மனியின் சொகுசு கார் நிறுவனமான பிஎம்டபிள்யூ இம்முறை எலக்ட்ரிக் எஸ்யூவியை கொண்டு வந்துள்ளது. இந்நிறுவனம் தயாரிக்கும் முதல் எஸ்யூவி கார் இதுவாகும். இந்த நேரத்தில், கவர்ச்சிகரமான தோற்றம் மற்றும் மிகவும் பிரீமியம் அம்சங்களைக் கொண்ட இந்த மின்சார கார் பற்றிய பல்வேறு ஆச்சரியமான தகவல்கள் வெளிவந்தாலும், இன்று காரின் விலை உறுதியானது.

விலை எவ்வளவு தெரியுமா?
இந்த பிஎம்டபிள்யூ காரின் விலை இந்திய சந்தையில் ரூ.1,15,90,000 (1.16 கோடி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த காருக்கான முன்பதிவுகளை நாட்டில் உள்ள அனைத்து BMW டீலர்ஷிப்களிலும், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் செய்யலாம் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

bmw

SUV iX காரின் சிறப்பம்சங்கள்
இந்த காரில், ஓட்டுநரின் பாதுகாப்புக்காக பல வகையான நவீன பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. BMW IX E SUV வாகனத்தில் பிரேக்குடன் கூடிய முன் மோதல் எச்சரிக்கை அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது.

இதனல், வாகனத்தை ஓட்டுபவர், பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்கள் உட்பட ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய வாகனங்களைப் பற்றிய தகவல்களும் தொடர்ந்து பெறமுடியும். அதே நேரத்தில், வாகனத்தில் தானியங்கி அவசரகால பிரேக்கிங் சிஸ்டம் இருக்கிறது. இது, கார் ஓட்டுநரின் வேலையை மிகவும் எளிதாக்கும். 

SUV iX பல சக்திவாய்ந்த அம்சங்களை கொண்டுள்ளது
சர்வதேச சந்தையில், BMW iX ஏற்கனவே இரண்டு வகைகளில் கிடைக்கிறது - xDrive 40 மற்றும் xDrive 50. xDrive 40 வேரியண்டில் 71 kWh பேட்டரி பேக் உள்ளது.  ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 414 கிமீ தூரம் செல்லக்கூடிய இந்த பேட்டரி பேக் இது.
இரட்டை மோட்டார்கள் 322 BHP மற்றும் 630 Nm பொருத்தப்பட்டுள்ளது.

xDrive 50 வேரியண்ட், 105.2 kWh பேட்டரி பேக்கைப் பயன்படுத்துகிறது, இது அதிகபட்சமாக 611 கிமீ வரம்பை வழங்குகிறது. இது தவிர, காரின் உட்புற அம்சங்களும் சிறப்பாக இருப்பதால் முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தில் அட்டகாசமாக உள்ளது. இந்த BMW கார் Mercedes EQC, Jaguar I-Pace மற்றும் Audi e-tron ஆகியவற்றுடன் போட்டியிடும் என்று கூறப்படுகிறது.

ALSO READ:Cheapest Electric Scooters: மின்சார வாகன சந்தையில் களமிறங்குகிறது Darwin 

கடந்த 15 ஆண்டுகளாக BMW இந்தியாவில் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. புதிய தொழில்நுட்பகளை இந்தியாவுக்கு விரைவில் கொண்டு வரவேண்டும் என பி.எம்.டபிள்யூ விரும்புவதாக, அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இந்த நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட பல வாகனங்களை உள்நாட்டிலேயே தயாரித்துள்ளது. தேவையை உருவாக்க உற்பத்தியின் உள்ளூர்மயமாக்கல் முக்கியமானது என்று நிறுவனம் நம்புகிறது. 

BMW குரூப் இந்தியா தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி (CEO) விக்ரம் பவா, நிறுவனத்தின் லட்சியம் பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா?  "ஒரு மாடலுக்கான தேவையை உருவாக்கி அதை உள்ளூர்மயமாக்குவதுதான். இந்த புதிய தொழில்நுட்பங்கள் எதிர்காலத்தில் உள்ளூர்மயமாக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம், ஆனால் நீங்கள் அதற்கு ஒரு பெரிய தேவையை உருவாக்க வேண்டும்". 

ALSO READ:Ola EVக்கு போட்டியாக களமிறங்கும் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News