Realme அதன் அடுத்த தலைமுறை 320W சார்ஜிங் தொழில்நுட்பத்தை வெளியிட்டது, இதுதான் உலகின் அதிவேக சார்ஜிங் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் Realme GT3 உடன் 240W சார்ஜரை அறிமுகப்படுத்திய ஒரு வருடத்திற்குப் பிறகு அதிவேக சார்ஜரை நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புதிய துரித சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட சார்ஜரின் பெயர் என்னவாக இருக்கும் என்பதை ரியல்மி நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.
டிரெயில்பிளேசிங் தொழில்நுட்பம்
டிரெயில்பிளேசிங் தொழில்நுட்பம், உலகின் அதிவேக சார்ஜிங் பவர் 320Wஐ கொண்டுள்ளது. 320W என்ற உலகின் அதிவேக சார்ஜிங் சக்தியை வழங்கும் இந்த தொழில்நுட்பம், மொபைல் போன்களின் வரலாற்றில் புரட்சிகர மைல்கல்லாக இருக்கும்.
இது நான்கரை நிமிடங்களில் ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்துவிடும், ஒரே நிமிடத்தில், 320W சார்ஜர் ஒரு சாதனத்தை 26 சதவீத அளவுக்கு சார்ஜ் செய்துவிடும். அதேபோல, உங்கள் ஸ்மார்ட்ஃபோனை 50 சதவீதத்திற்கு மேல் சார்ஜ் செய்ய இரண்டே இரண்டு நிமிடங்கள் போதும்.
நான்கரை நிமிட அதிசயம்
குறுகிய காலத்தில் சாதனங்களை முழுமையாக சார்ஜ் செய்ய உதவும் இந்த தொழில்நுட்பம், ஸ்மார்ட்போன் பயனர்களுக்கான சார்ஜிங் அனுபவத்தை மேலும் அதிகரித்துள்ளது. இது, "நோ-வெயிட்" சார்ஜிங்கின் புதிய சகாப்தமாக இருக்கும்.
Realme 320W SuperSonic ஆனது, உலகெங்கிலும் உள்ள பயனர்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தும் என, ரியல்மி நிறுவனம் கருதுகிறது. அதுமட்டுமல்ல, சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் ரியல்மி, ஸ்மார்ட்போன்களுக்கான உலகின் முதல் Folded Battery பேட்டரியை வெளியிட்டது.
மேலும் படிக்க | BSNL-க்கு உயிர் கொடுக்கும் மத்திய அரசு... கலக்கத்தில் ஜியோ, ஏர்டெல்..!
ரியல்மி ஃபோல்டட் பேட்டரியை . இதில், 4420mAh திறன் உள்ளது. மடிக்கக்கூடிய சாதனங்களின் இயக்கவியலால் ஈர்க்கப்பட்ட இந்த குவாட்-செல் பேட்டரி ஒரே நேரத்தில் சார்ஜ் செய்யக்கூடிய நான்கு தனித்தனி செல்களை உள்ளடக்கியது. ஒவ்வொன்றும் 3 மிமீக்கு கீழ் தடிமனாக இருந்தாலும், 10 சதவிகித பங்களிப்பை வழங்குகின்றன. இது பாரம்பரிய வடிவமைப்புகளை விட ஒரு சதவீதம் திறன் அதிகமாக இருக்கிறது.
உலகின் முதல் குவாட்-செல் ஸ்மார்ட்போன் பேட்டரி
ஸ்மார்ட்போனில் தடையின்றி பொருந்தக்கூடிய நேர்த்தியான வடிவ காரணியைப் பராமரிக்கும் இந்த பேட்டரி, உலகின் முதல் குவாட்-செல் ஸ்மார்ட்போன் பேட்டரி ஆகும். இது, சார்ஜிங் வேகத்தை துரிதப்படுத்துகிறது.
AirGap
ஏர்கேப் மின்னழுத்த மின்மாற்றியானது, இந்த வகையில் தொழில்துறையின் முதல் மின்னழுத்த மின்மாற்றியாக இருக்கும். இந்த தொழில்நுட்பம் ஸ்மார்ட்போன்களுக்கான மேம்பட்ட தொடர்பு இல்லாத மின்காந்த மாற்றத்தைக் கொண்டுள்ளது. சர்க்யூட் பிரச்சனை ஏற்பட்டால், உயர் மின்னழுத்தம் கொடுக்கும் பேட்டரியில் இருந்து போனை விலக்கிவிடுகிறது என்பதால், ஆபத்து இல்லாத சார்ஜிங் என்று இந்த சார்ஜரைச் சொல்லலாம்..
இதன் டிரான்ஸ்பார்மர் மிகவும் கச்சிதமானது, விரல் நுனியை விட சிறியது. தனித்துவமான செயல்பாடு இதன் முக்கியமான சிறப்பம்சம் ஆகும். அதேபோல, வெப்ப நிர்வாகத்தை பராமரிக்கும் போது பேட்டரியை பாதுகாக்க மின்னழுத்தத்தை வெறும் 20V ஆக குறைத்துவிடுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ