GPS உதவியால் இயக்கப்பட்ட கார், குளத்தில் விழுந்து விபத்து!

புதிய நகரங்களில் வாகனம் ஓட்ட செல்லும் வாகன ஓட்டிகள், தங்களது பயணத்திற்கு நாடுவது GPS உதவியுடன் இயங்கும் செயலிகளை தான்!

Last Updated : Jan 3, 2019, 02:53 PM IST
GPS உதவியால் இயக்கப்பட்ட கார், குளத்தில் விழுந்து விபத்து! title=

புதிய நகரங்களில் வாகனம் ஓட்ட செல்லும் வாகன ஓட்டிகள், தங்களது பயணத்திற்கு நாடுவது GPS உதவியுடன் இயங்கும் செயலிகளை தான்!

தங்களுக்கு வழி தெரியாது என்பதாலே இந்த தொழில்நுட்பங்களின் உதவியினை வாகன ஓட்டிகள் நாடி வருகின்றனர். ஆனால் இந்த தொழில்நுடப்ங்களே அவர்களுக்கு பாதகமாய் அமைந்துவிட்டால். இதேப்போன்ற நிகழ்வு தான் சீனாவின் வாவுன் பகுதியில் நிகழ்ந்துள்ளது.

ஜாவுங்க் என்ற சீன இளைஞர் தனது கைபேசியில் உள்ள GPS உதவி கொண்டு தனது காரினை இயக்கி சென்றுள்ளார். தனது நண்பர் ஒருவரை காணச் சென்ற அவர், நண்பரது வீட்டிற்கு வழி அறியாத நிலையில், தனது கைப்பேசியில் காண்பிக்கப்பட்ட வழியில் சென்றுள்ளார்.

பாதிவழியில் அவரது கைப்பேசியின் GPS அவரை கைவிட, கட்டுமாண பணியில் இருந்த பாலத்தில் பயணித்து விபத்துக்குள்ளாகினார். பாலம் பாதி அளவே கட்டப்பட்ட நிலையில், வேகமாக சென்ற ஜாவுங்கின் வாகனம், பாலத்தினை தாண்டி குளத்தில் விழுந்தது. தன் கட்டுப்பாட்டினை மீறி வாகனம் சென்ற நிலையில் ஜாவுங்கினால் தனது வாகனத்தினை கட்டுப்படுத்த இயலாமல் போனது.

தனது காரினை காப்பாற்ற இயலாது என அறிந்துக்கொண்ட, ஜாவுங்க் சினிமா பானியில் காரின் கூரையில் ஏறி தப்பித்தார். எனினும் கார் பாலத்தை தாண்டி தண்ணீரில் வழுந்தது.

இதனையடுத்து ஹங்கிப்பி காவல்துறையினர் விவரம் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்தனர். தண்ணீரில் மூன்றில் ஒரு பங்கு மூழ்கிய காரினை கிரேன் உதவியுடன் மீட்டெடுத்தனர். 

நாடு முழுவதும் அனைவரது கவனத்தை ஈர்த்துள்ள இச்சம்பவம், தொழில்நுட்பத்தை முழுமையாக நம்பலாமா என்ற ஒரு அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Trending News