மெக்சிகன்-அமெரிக்க இசை மற்றும் பொழுதுபோக்கு அடையாளமாக விளங்கிய செலினா குவிண்டனிலா அவர்களை நினைவுகூறும் வகையில் கூகிள் சிறப்பு டூடில் ஒன்றினை வெளியிட்டுள்ளது!
தேஜனோ இசை ராணி என அழைக்கப்படும் செலினா ஏப்ரல் 16, 1971 ஆம் ஆண்டில் பிறந்தார்.
தேஜனோ இசை கலையில் பெயர் பெற்ற முதல் பெண் பாடகியாகவும், பிரபலமான பாடகியாகவும் விளங்கியவர் செலினா குவிண்டனிலா.
இசை உலகில் ஆண்களின் ஆதிக்கம் அதிகமாக விளங்கிய நிலையில் தனது திறமையினால் எண்ணற்ற ரசிகர்களை பெற்றவர்.
1993-ஆம் ஆண்டு மெக்சிகன்-அமெரிக்க ஆல்பம் பிரிவில் முதல் கிராமிய விருதை வென்றவர் தேஜானோ..
இசை மட்டுமல்ல, சமூக ஆர்வலர், ஆர்விமிக்க தொழில் முனைவர் மற்றும் ஃபேஷன் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக விளங்கியவர் செலினா.
இளம் வயதிலேயே மிகவும் பிரபலமான செலினா 1995-ஆம் ஆண்டு சுட்டுக் கெல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.