Sony Xperia ACE 3: மிகவும் மலிவான 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது சோனி

Sony Xperia: எக்ஸ்பீரியா எஸ்3 ஆனது எச்டி+ டிஸ்ப்ளே, 5ஜி-க்கு தயாராக இருக்கும் குவால்கம் சிப்செட் மற்றும் பெரிய பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களுடன் வருகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 13, 2022, 10:56 AM IST
  • சோனி நிறுவனம், ஃபிளாக்ஷிப் போன் எக்ஸ்பீரியா 1IV -ஐ அறிமுகம் செய்துள்ளது.
  • நிறுவனம் எக்ஸ்பீரியா10 IV-ஐயும் அறிமுகப்படுத்தியது.
  • செல்ஃபி எடுக்க இந்த போனில் 5 மெகாபிக்சல் கேமராவும், பின் பேனலில் எல்இடி ப்ளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் கேமராவும் உள்ளது.
Sony Xperia ACE 3: மிகவும் மலிவான 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது சோனி title=

சோனி நிறுவனம், ஃபிளாக்ஷிப் போன் எக்ஸ்பீரியா 1IV (Xperia 1 IV) மற்றும் மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன் எக்ஸ்பீரியா10 IV (Xperia 10 IV) ஆகியவற்றை அறிமுகப்படுத்தியதோடு, ஆரம்ப நிலை ஸ்மார்ட்போனான எக்ஸ்பீரியா எஸ்3-ஐயும் (Xperia Ace 3) அறிமுகப்படுத்தியுள்ளது. 

இது சோனியின் மிகவும் மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போனாக அறிமுகமானது. எக்ஸ்பீரியா எஸ்3 ஆனது எச்டி+ டிஸ்ப்ளே, 5ஜி-க்கு தயாராக இருக்கும் குவால்கம் சிப்செட் மற்றும் பெரிய பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களுடன் வருகிறது. கடந்த ஆண்டு எக்ஸ்பீரியா எஸ் II அறிமுகப்படுத்தப்பட்டது. இது 4ஜி சாதனமாக இருந்தது. எஸ் 3 5ஜி உடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சோனி எக்ஸ்பீரியா ஏஸ் III பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். 

சோனி எக்ஸ்பீரியா ஏஸ் III விலை

எக்ஸ்பீரியா ஏஸ் III ஜப்பானில் ப்ரீ ஆர்டருக்கு கிடைக்கிறது. இது ஜூன் நடுப்பகுதியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. சாதனத்தின் விலை JPY 34,408 (தோராயமாக ரூ. 20,500) ஆகும். இது கருப்பு, சாம்பல், நீலம் மற்றும் செங்கல் ஆரஞ்சு போன்ற வண்ணங்களில் வருகிறது.

மேலும் படிக்க | Motorola Edge 30 அசத்தல் போன் இந்தியாவில் அறிமுகம்: விவரம் இதோ 

சோனி எக்ஸ்பீரியா ஏஸ் III விவரக்குறிப்புகள்

சோனி எக்ஸ்பீரியா ஏஸ் 3 (Sony Xperia Ace III) 140 x 69 x 8.9மிமீ அளவுகள் மற்றும் 162 கிராம் எடையுடையது. சாதனம் வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்புடன் 5.5-இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது 720 x 1496 பிக்சல்கள் எச்டி+ தீர்மானம் மற்றும் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பை வழங்குகிறது. 

செல்ஃபிக்காக இந்த போனில் 5 மெகாபிக்சல் கேமராவும், பின் பேனலில் எல்இடி ப்ளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் கேமராவும் உள்ளது. ஸ்னாப்டிராகன் 480 5ஜி மொபைல் இயங்குதளம் எக்ஸ்பீரியா ஏஸ் III (Sony Xperia Ace III) ஐ இயக்குகிறது. இது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பகத்துடன் வருகிறது. கூடுதல் சேமிப்பிற்காக மைக்ரோ எஸ்டி கார்டு உள்ளது. இந்த போன் ஆண்டிராய்ட் 12 OS இல் இயங்குகிறது.

சோனி எக்ஸ்பீரியா ஏஸ் III பேட்டரி

எக்ஸ்பீரியா ஏஸ் III ஆனது 4,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது யுஎஸ்பி-பிடி சார்ஜிங் மற்றும் விரைவான சார்ஜிங்கை ஆதரிக்கிறது. பாதுகாப்பிற்காக, இது சைட் எபேசிங் கைரேகை ஸ்கேனரைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 5ஜி, வை-ஃபை 802.11ac, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், என்எஃப்சி மற்றும் யுஎஸ்பி-சி போர்ட் போன்ற பிற அம்சங்கள் உள்ளன.  இது ஐபி6எக்ஸ் மதிப்பிடப்பட்ட தூசிப்புகா மற்றும் ஐபி6எக்ஸ்5/ஐபி6எக்ஸ்8 நீர்-எதிர்ப்பு சாதனமாகும்.

மேலும் படிக்க | இந்த செயலிகள் இனி பிளே ஸ்டோரில் இருக்காது - கூகுள் அதிரடி 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News