Cheapest Electric Solar Car: பெட்ரோல் பற்றிய கவலை வேண்டாம், சூரிய ஒளி இருந்தால் போதும்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மின்சார வாகனங்கள் அவற்றுக்கு ஒரு நல்ல மாற்றாக மாறி வருகின்றன. ஆனால் கலிபோர்னியாவின் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் மற்றொரு மாற்றை அறிமுகம் செய்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 16, 2021, 06:47 PM IST
  • கலிபோர்னியாவின் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் சூரிய சக்தியால் இயக்கப்படும் மின்சார வாகன கான்செப்டில் ஒரு காரை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • அன்றாட பயணத்திற்கு, இந்த எஸ்யூவி ஒரு சிறந்த தேர்வாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
  • இந்த வாகனத்தின் விநியோகம் 2024 ஆம் ஆண்டிற்குள் தொடங்கப்படும்.
Cheapest Electric Solar Car: பெட்ரோல் பற்றிய கவலை வேண்டாம், சூரிய ஒளி இருந்தால் போதும் title=

Humble One Solar Powered Electric SUV: பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மின்சார வாகனங்கள் அவற்றுக்கு ஒரு நல்ல மாற்றாக மாறி வருகின்றன. ஆனால் கலிபோர்னியாவின் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் மற்றொரு மாற்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனம் சூரிய சக்தியால் இயக்கப்படும் மின்சார வாகன கான்செப்டில் ஒரு காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

சூரிய சக்தியில் இயங்கும் உலகின் முதல் வாகனம் 

வடிவமைப்பு மற்றும் பாடி வகையைப் பொறுத்தவரை, இது சூரிய சக்தியில் (Solar Power) இயங்கும் உலகின் முதல் வாகனம் என்று விவரிக்கப்படுகிறது. இந்த எஸ்யூவி சூரிய ஒளியால் காரில் உள்ள பேட்டரியை சார்ஜ் செய்கிறது. மேலும் இது சிறந்த கவரேஜையும் வழங்குகிறது என்று நிறுவனம் கூறுகிறது.

ALSO READ: Best Bikes: அசத்தலான விலையில், அதிரடியான செயல்திறன் கொண்ட பைக்குகளின் பட்டியல் இதோ

மேல்பகுதி மற்றும் ஜன்னல்களில் சூரியசக்தி பேனல்கள்

அதன் வடிவமைப்பு பெரும்பாலும் கிராஸ்ஓவர் மாதிரியுடன் ஒத்திருக்கிறது. அதன் மேல்பகுதி மற்றும் ஜன்னல்கள் ஆகியவற்றில் மொத்தம் 80 சதுர அடி சோலார் பேனல்கள் நிறுவப்பட்டுள்ளன. இது சூரிய ஒளியால் வாகனத்தில் உள்ள பேட்டரி பேக்கை சார்ஜ் செய்கிறது. இந்த எஸ்யூவி சோலார் பேனல் மூலம் செய்யப்படும் சார்ஜால் மட்டுமே இயக்கப்படுகிறது. இது ஒரு நாளைக்கு 96 கிலோமீட்டர் வரையிலான டிரைவிங் ரேஞ்சை அளிக்கிறது என்று கூறப்படுகிறது.

டெஸ்லா வாகனத்தை விட குறைவான எடை

இந்த வாகனம் நல்ல மைலேஜ் தரும் வகையில், ஹம்பிள் ஒன்னின் எடையை குறைந்த அளவில் வைத்திருக்கவும் நிறுவனம் முயற்சித்துள்ளது. இந்த கிராஸ்ஓவர் எஸ்யூவியின் மொத்த எடை 1,814 கிலோ ஆகும். இது டெஸ்லா மாடல் எஸ் ஐ விட சுமார் 348 கிலோ குறைவான எடை கொண்டது. இந்த எஸ்.யூ.வீ-யின் உள் பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால், அது சுமார் 800 கி.மீ வரை டிரைவிங் ரேஞ்சை அளிக்கிறது. இது மட்டுமல்லாமல், இந்த எஸ்யூவியின் பிக்-அப்பும் டெஸ்லாவை விட மிகவும் சிறந்ததாக உள்ளது.

இந்த வாகனத்தில் அதிக இடம் உள்ளது

இந்த காரில் உட்கார அதிக இடம் உள்ளது. நான்கு கதவுகளைக் கொண்டுள்ள இந்த எஸ்யூவியில் மொத்தம் ஐந்து பேர் அமர முடியும். இந்த வாகனத்தில் 80 சதுர அடி ஒளிமின்னழுத்த சூரிய மின்கலங்கள் உள்ளன. இது 198 அங்குல நீளம் கொண்டது. இது டெஸ்லாவின் (Tesla) Model X உடன் ஒத்திருக்கிறது. எனினும் இந்த காரின் எடை டெஸ்லாவின் காரை விட மிகக் குறைவு. இதில் கொடுக்கப்பட்டுள்ள மின்சார மோட்டார் 1,020 ஹெச்பி வரை மின்சாரம் உற்பத்தி செய்கிறது என்றும் அதன் வேகம் மணிக்கு 260 கிலோமீட்டர் என்றும் கூறப்படுகிறது. இது தவிர, இந்த எஸ்யூவி ஒரு மணி நேரத்திற்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 2.5 வினாடிகளில் பிடிக்கும் திறன் கொண்டது.

விலை என்னவாக இருக்கும்?

இதுவரை, இந்த எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் குறித்த எந்த தகவலையும் ஸ்டார்டப் ஹம்பிள் மோட்டார் பகிர்ந்து கொள்ளவில்லை. ஆனால் அன்றாட பயணத்திற்கு, இந்த எஸ்யூவி ஒரு சிறந்த தேர்வாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு அதன் விலை பற்றி எதையும் சொல்வது கடினம். பல வாகன நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த வாகனத்தின் விலை சுமார் 1,09,000 அமெரிக்க டாலராக இருக்கக்கூடும். இதன் முன்பதிவு தொடங்கி விட்டது. இந்த வாகனத்தின் விநியோகம் 2024 ஆம் ஆண்டிற்குள் தொடங்கப்படும்.

ALSO READ: TVS நிறுவனத்தின் bluetooth Scooter: இனி தொலைவிலிருந்தே பல பணிகளை செய்யலாம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News